சூப்பர் ஹிட் படங்களை மிஸ் செய்த 5 தமிழ் நடிகைகள்.. கிளாமருக்கு பயந்து அஜித் படத்தை தவறவிட்ட ஹீரோயின்

தமிழ் சினிமா உலகில் இன்று முன்னணி நடிகைகளாக ஓடிக்கொண்டிருக்கும் பலரும் டாப் ஹீரோக்களின் படங்கள் என்றால் கதை கேட்காமலேயே நடிக்கின்றனர் இப்படிப்பட்ட நடிகைகள் ஒரு சில நல்ல படங்களை தவற விட்டுள்ளனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

தமிழன் : 2002 ஆம் ஆண்டு மஞ்சு தி இயக்கத்தில் இமான் இசையில் வெளியான திரைப்படம்  தமிழன் இந்த படத்தில் விஜய், ரேவதி, நாசர், டெல்லி கணேஷ், விவேக் என பலர் நடித்திருந்தனர். படம் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்த படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருந்தது ஐஸ்வர்யாராய் தான். விஜய் சின்ன பையன் போல் இருக்கிறார் அவர் எனக்கு செட்டாக மாட்டார் என கூறி இந்த படத்தில் அவர் நடிக்கவில்லையாம்.

மூக்குத்தி அம்மன் : ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த இந்த திரைப்படம் வெளிவந்து நல்ல கருத்துக்களை எடுத்துரைத்ததால் பெரிய ஹிட் அடித்தது இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஆனால் முதலில் இந்த கதையை அனுஷ்காவுடன் தான் சொல்லி இருக்கிறாராம் அவர் சில காரணங்களால் மறுக்க பிறகு நயன்தாரா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

பேச்சுலர் : ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரொமான்டிக் திரைப்படமாக இருந்ததால் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடியது இந்த படத்தில் திவ்யபாரதி ஹீரோயினாக நடித்திருப்பார் ஆனால் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது வாணி போஜன் என சொல்லப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் : ஜவகர் மித்திரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பெரிய ஹிட் அடித்தது இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருப்பார். இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் கைதட்டல் வாங்கியது ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது நயன்தாரா தான் சில காரணங்களால் அவர் நடிக்காமல் போக நித்யா மேனன் ஏற்று நடித்திருந்தாராம்..

பில்லா : விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் அதிரி புதிரி ஹிட்.. இந்த படத்தில் நயன்தாரா, நமீதா, ரகுமான் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருப்பார்கள்.. இந்த படத்தில் நயன்தாரா நடித்த  கதாபாத்திரத்தில் முதலில் அசின் தான் நடிக்க வேண்டியதாம் ஆனால் இந்த படத்தில் அதிக கவர்ச்சியாக இருந்ததால் அவர் நடிக்காமல் போய்விட்டார்.