சினிமாவை விட சீரியலில் அதிக லாபம் பார்க்கும் 5 நட்சத்திரங்கள்.! கல்லாக் கட்டும் ஆதி குணசேகரன்..

Serial actress: திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரை சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கிறது. இவ்வாறு சீரியலின் மூலம் பிரபலமாக ஏராளமான நடிகர், நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று முன்னணி பிரபலங்களாக வளர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் சில பிரபலங்களும் அதிகம் சம்பளம் வாங்கி வருபவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சீரியல்களில் அதிக சம்பளம் வாங்கும் 5 பிரபலங்கள் குறித்து பார்க்கலாம்.

மாரிமுத்து: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் நடித்து வரும் நடிகர் மாரிமுத்துவின் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இந்த சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் தரப்படுகிறதாம்.

பப்லு: நடிகர் பப்லு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் நிலையில் இவர் கிட்டதட்ட 100 கார்கள் வரை வாங்கி வாங்கி மாற்றுவாராம் அப்படிப்பட்ட இந்த நடிகர் ஒரு நாளைக்கு 20ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

அம்பிகா: நடிகை அம்பிகா பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் சில ஆண்டுகளாக சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் அருவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவருக்கு தான் இருப்பதிலேயே அதிக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு நாளைக்கு 35 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

ரஞ்சித்: ஹீரோவாக ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நடிகர் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலில் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் இதனை அடுத்த தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பழனிச்சாமி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவருக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை ஒரு நாளைக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.

ஸ்டாலின்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இவர் ஒரு எபிசோடுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கிய வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment