மின்னலடி இதுதானா.. கிரிக்கெட்டில் சிக்ஸர் அதிகமாக அடித்த 5 நட்சத்திர வீரர்கள்.!

Rohit sharma : ஆசிய கோப்பை போட்டியை தொடர்ந்து இந்தியாவில் உலகக்கோப்பை போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பல பரிட்சை நடத்தி வருகின்றன நாளை இந்தியா – இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. ஏற்கனவே இந்தியா ஐந்து போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ளதால் நாளை  6- வது வெற்றியை ருசிக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்த உலக கோப்பையில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வருகிறது குறிப்பாக ரோகித் சர்மா தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் அதிலும் குறிப்பாக சிக்ஸர்களை பறக்க விடுகிறார். இந்த நிலையில் சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர் படித்த வீரர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

தன்னுடைய படத்தில் இவர்கள்தான் பெஸ்ட் என கிப்ட் கொடுத்து அசத்திய விஜய்.! அந்த 5 லக்கிமேன் யாருப்பா..

ரோஹித் சர்மா :  இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான இவர் அடிக்க ஆரம்பித்துவிட்டால் சிக்ஸர், பௌண்டரிகள் பறக்கும் அதற்கு எடுத்துக்காட்டு ஆசிய கோப்பையில் இருந்து 2023 உலக கோப்பை வரை தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் இவர் சர்வதேச போட்டியில் சுமார் 564 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கிறிஸ் கெயில் : வெஸ்ட் இண்டியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான இவர் முதலில் பந்து வீச்சாளராகத்தான் அணியில் இடம் பிடித்தார் பின் அதிரடி ஆட்டத்தின் மூலம் துவக்க வீரராக மாறினார். இவர் அடிக்கும் ஒவ்வொரு அடியும் சும்மா இடி மாதிரி இருக்கும் சிக்ஸர்களை அசால்டாக அடிக்கக்கூடியவர் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 553 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

பிரபல முன்னணி நடிகையுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் விஜய்.. தளபதி ஆசை நிறைவேறுமா?

சாகித் அஃப்ரிடி : பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான இவர் துவக்க வீரராகவும் நடு வரிசை வீரராகவும் விளையாடி இருக்கிறார் எங்கு இறங்கினாலும் சரி அதிரடியை காட்டக் கூடியவர். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 476 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

மார்ட்டின் கப்டில் : நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான இவர் எப்பொழுதுமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அவர் 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடக்கூடிய ஒரு பேட்டர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் 398 சித்தர்களை அடித்துள்ளார்.

மகேந்திரசிங் தோனி  : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான இவர் நடு வரிசையில்  இறங்கக்கூடியவர். இவர் ஆடுகளத்தில் இருக்கும் வரை  இந்தியா தான் வெற்றி பெறும் எந்த பெரிய ஸ்கோராக இருந்தாலும் அதை அடித்து வெற்றி பெற வைக்க கூடியவர் சிக்ஸர்களை அசால்டாக அடிப்பார்.

 

Exit mobile version