சிம்புவை பற்றி யாருக்கும் தெரியாத 5 ரகசியங்கள்.!

சிம்புவை பற்றிய உண்மைகள் : சிம்பு நேற்று பிறந்த நாள் கொண்டாடினார். இவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பினை இப்பொழுது காண உள்ளோம்.
சிம்பு அவர்கள் மாநாடு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் சிம்புவிற்கு நேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதேபோன்று பல முன்னணி நடிகர்கள் சிம்புவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சிம்புவைப் பற்றி சில குறிப்புகள் வருகின்றன:

1. சிம்புவிற்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் ஒரு கட்டு கட்டுவார். சூட்டிங் ஸ்பாட்டில் சரி மற்ற நேரங்களிலும் சரி அவர் மிக விரும்பி அதிகமாக சாப்பிடுவது சிக்கன் பிரியாணி ஆகும். சில சமயங்களில் அவருக்கு போரடித்தால் வீட்டில் அவரே பிரியாணி செய்து சாப்பிடுவாராம்.இதிலிருந்து தெரிகிறது சிம்புவிற்கு பிரியாணி என்றால் உயிர்.

2. நடிகரும் தந்தையுமாகிய டி ராஜேந்திரன் அவர்கள் படம் நடித்தார் அதுமட்டுமல்லாது. அவரது மகனான சிம்புவையும் இளம் வயதிலேயே நடிக்க வைத்தார். அதிலிருந்து இன்றுவரை அவருக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் அஜித் ஆவார். அவரை இன்றுவரை அவரை ரோல் மாடலாக வைத்து உள்ளார். அதுபோன்று ஹாலிவுட்டில் தி காட்ஃபாதர் படம் புகழ் அல் பசினோவும், மார்கன் ஃப்ரீமேனும் இந்த மூன்று பேரும் சிம்புவிற்கு மிகவும் பிடித்தவர்கள்.

3. சிம்புவிற்கு சிறுவயதில் இருந்தே நண்பர்கள் உண்டு அதில் குறிப்பாக நடிகரும் நண்பரும் ஆகிய மகத் அவருடைய நெருங்கிய நண்பர் ஆவார் அதுமட்டுமில்லாமல் சாந்தப்பன்,தீபன் அவர்கள். சிறுவயதிலிருந்து சிம்புவும் அவரது நண்பர்கள் அதுமட்டுமில்லாமல் இப்பொழுது அவர் சிம்புவுடன் நெருங்கி பழகுகிறார் இதை பார்த்த ரசிகர்கள் முகத்தில் சற்று சலிப்பு ஏற்படுகிறது.

4. சிம்பு நடிகராக மட்டுமல்லாது பல துறைகளில் பணியாற்றி வருகிறார் அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இசையில் அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உண்டு. இளம் இசையமைப்பளர்களில் அவருக்கு மிகவும் பிடித்தவராக இருப்பவர் அனிருத். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து பல ஆல்பங்கள் போட்டுள்ளனர் அதுவும் ஹிட்டாகி உள்ளது.

5. சூப்பர் ஸ்டார் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் அதுபோல சிம்புவிற்கும் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பும் பிடிக்கும்.இதை பார்த்து வளர்ந்து வந்த சிம்புவிற்கு அவரது படங்களை ரீமேக் செய்து நடிக்க ஆசை என ஊடகங்களில் தெரிவித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment