தனுஷை அடுத்த லெவெலுக்கு தூக்கி விட்ட 5 திரைப்படங்கள்.! நடிப்பு அரக்கன்னா சும்மாவா..

சினிமா உலகில் ஒரு ஹீரோ முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க முக்கிய காரணம் அவருடைய நடிப்பு திறமை, அவரது படங்கள் வெற்றி பெறுவது தான் அந்த வகையில் நடிகர் தனுஷ் எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்து இருப்பார்.  அப்படி தனுஷ் மிரட்டிய 5 திரைப்படங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்..

1. காதல் கொண்டேன் : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவானது. இந்த படத்தில் அமைதியான பையனாக ஆரம்பத்தில் தென்பட்டாலும் போக போக தனது வில்லத்தனத்தை படத்தில் பயங்கரமாக காட்டி ரசிகர்கள் மனதில் கைதட்டலை வாங்கி இருப்பார்.

2. ஆடுகளம்  : இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சேவல் சண்டை மையமாக வைத்து உருவாக்கியிருந்தது.  படத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறி சூப்பரா நடித்திருப்பார் அதேசமயம் காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிக்கும்படி இருந்தது ஆடுகளம் படம் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

3. வேலையில்லா பட்டதாரி : வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் தான் வேலையில்லா பட்டதாரி இந்த படம் பிளாக்பஸ்டர் ஆக மாறியதால் அடுத்த பாகம் உடனே எடுக்கப்பட்டது ஆனால் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் தனுஷின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

4. கர்ணன்  : வித்தியாசமான படங்களை எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் மாரி செல்வராஜ். அவருடன் கூட்டணி அமைத்து கர்ணன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க ஜாதி கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது தனுஷின் மாறுபட்ட நடிப்பு இந்த படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பிறகு ரசிகர்கள் இவரை நடிப்பு அரக்கன் என கூறி வந்தனர்.

5. அசுரன் :  வெற்றி மாறனும், தனுஷம் எப்போ கைகோர்த்தாலும் அந்த ஹிட் தான். அந்த வகையில் நீண்ட இடை விலகிப் பிறகு அசுரன் படத்தில் கைகோர்த்தனார் இந்த படம் முழுக்க முழுக்க ஜாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது படத்தில் தனுஷின் எதார்த்தமான நடிப்பு ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் போகப் போக  ஆக்சன் கதாபாத்திரங்களிலும்  பின்னி பெடல் எடுத்து இருந்தார்.

Leave a Comment