அதிக முறை திருமணம் செய்து கொண்ட 5 சினிமா பிரபலங்கள்.! லிஸ்ட் இதோ.

சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் சிலர் அதிக முறை திருமணம் செய்து உள்ளனர். காரணம் திருமண பந்தம் ஏதோ ஒரு வகையில் சரி இல்லாமல் போனால் மறுமணம் செய்து கொள்வார்கள் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் அதிக முறை திருமணம் செய்த நடிகர்கள் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதனை விலாவாரியாக பார்ப்போம்.

ஜெமினி கணேசன் : இவரை ரசிகர்கள் அனைவரும் காதல் மன்னன் ஜெமினி கணேசன் என செல்லமாக அழைப்பது வழக்கம் இவர் 19 வயதிலேயே அலமேலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின் பல படங்களில் நடிக்க தொடங்கியதால் நடிகை புஷ்பவல்லி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவரை தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வந்த சாவித்திரியையும் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர்  : சினிமா அரசியல் இரண்டிலும் வெற்றியை பெற்றவர் எம்ஜிஆர் இவர் முதலில் பார்க்கவி என்ற தங்கமணியை திருமணம் செய்து கொண்டார், அவர் அடுத்த ஆண்டு இறந்து விட பின் சதானந்தவதியை திருமணம் செய்து கொண்டார் அவரும் இறந்து போகவே பின் ஜானகி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராதிகா : இவர் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பு கைப்பற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் முதலில் பிரபல இயக்குனரும் நடிகரும் ஆன பிரதாப் போதனை திருமணம் செய்து கொண்டார் அந்த வாழ்க்கை ரொம்ப நாள் நீடிக்காமல் போக  விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின் லண்டனைச் சேர்ந்த ரிச்சர்ட் என்பவரை இரண்டாவதாக மனம் முடித்தார் கடைசியாக அதுவும் தோல்வியில் முடியவே.. மூன்றாவதாக சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கருணாநிதி : சினிமா, திரைக்கதை, எழுத்தாளர், அரசியல் என பலவற்றிலும் கொடி கட்டி பறந்தவர். கலைஞர் முதலில் பத்மாவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர் இறந்து போகவே பின் தயாளு அம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கடைசியாக ராசாத்தி என்பவரையும் திருமணம் செய்தார்.

லட்சுமி : நடிகை லட்சுமி முதலில் பெற்றோர்கள் சம்மதித்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாக பிரிந்து பின் நடிகர் மோகனை திருமணம் செய்தார் அதுவும் விவாகரத்தில் முடியவே கடைசியாக சிவச்சந்திரன் என்பவர் மீது காதல் வயப்பட்டு பின் அவரை திருமணம் செய்து கொண்டார்.

Leave a Comment