2022 ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பல்பு வாங்கிய 5 படங்கள் – கிண்டலும், கேலியும் செய்யப்பட்ட தி லெஜண்ட்.

ஒரு வருடம் முடியப்போகிறது என்றால் அந்த வருடத்தில் நடந்த பல சுவாரசிய தகவல்கள் வெளிவரும் அந்த வகையில் 2022-ல் பரபரப்பை கிளப்பி மண்ணை கவ்விய ஐந்து திரைப்படங்கள் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

1. தி லெஜண்ட் : மிகப்பெரிய தொழிலதிபரான சரவணன் அருள் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் தி லெஜன்ட் இந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவானது படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று சுமாராக ஓடியது. இந்த திரைப்படம் சரவணன் அவர்களுக்கு ஒரு நல்ல படமாக தான் இருந்தது.

2. மாறன் : கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாளவிகா நடிப்பில் உருவான இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று போட்ட காசை ஒரு வழியாக எடுத்தது. மேலும் தனுஷ் இந்த கதையை தேர்ந்தெடுத்திருக்கவே கூடாது. தவறு செய்துவிட்டார் என கூறி கமெண்ட் அடித்தனர்.

3. கோப்ரா : நடிப்பிற்கு பெயர் போனவர் விக்ரம். அஜய் ஞானமுத்து உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் கோப்ரா. இந்த படத்தில் விக்ரம் பல்வேறு விதமான கெட்டப்புகள் எல்லாம் போட்டு நடித்திருந்தாலும் படத்தின் கதை அந்த அளவுக்கு சிறப்பாக இல்லாததால் தோல்வியை தழுவியது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக பெரிய அளவில் பேசப்பட்டது.

4. கேப்டன் : ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வெளிவந்து கலவையான  விமர்சனத்தை பெற்று கூடியது ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக பிரடேட்டர் அளவு இருக்கும் என பெரும் பரபரப்பை கிளப்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

5. பிரின்ஸ் : தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடிய சிவகர்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் கைகோர்த்து இந்த படத்தில் நடித்தார் இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவானது படத்தின் பிரமோஷன் பெரிய அளவில் செய்யப்பட்டு படத்திற்கான  எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது ஆனால் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று சுமாராக ஓடியது.

Leave a Comment