வில்லி கதாபாத்திரத்தில் நடித்து சினிமா மார்க்கெட்டை இழந்த 5 முன்னணி நடிகைகள் – லிஸ்ட் இதோ.

சினிமாவில் தனது திறமையை வெளிக்காட்டி பல படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றனர். அப்படி சிறந்த நடிகைகளாக வலம் வந்த நடிகைகள் சிலர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனது மார்க்கெட்டை இழந்து பின்பு ஏன் இந்த கதாபாத்திரத்தில் நடித்தோம் என்று புலம்பும் அளவிற்கு சென்றுள்ளனர். வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கேரியரை தொலைத்த ஐந்து முக்கிய ஹீரோயின்களை பற்றி பார்க்கலாம்.

1. சிம்ரன் : இவர் அஜித் விஜய் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வளம் வந்தார். ஒரு கட்டத்தில் சிம்ரன் பிரசாந்த், லைலா நடிப்பில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன் படத்தில் முதன்முறையாக வில்லியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவரது வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கின.

2. ஜோதிகா : தமிழ் சினிமாவில் கொழுக் மொழுக் என்று வளம் வந்த நடிகை ஜோதிகா அவருக்கு என அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டு டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். ஆனால் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் வில்லியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளார்.

3. திரிஷா : நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரை நடித்து வருகிறார் தற்பொழுது கூட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து அதிக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணம் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் திரிஷா வில்லியாக நடித்திருந்தார் அதன் பிறகு இவருக்கு வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கின.

4. ராய் லட்சுமி : தமிழில் கற்க கசடற என்னும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பல படங்களை கைப்பற்றி நடித்து வந்தவர் ராய் லட்சுமி. ஒரு கட்டத்தில் இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 5. ரீமா சென் : தமிழில் மின்னலே படத்தின் மூலம் அறிமுகமாகி நடித்தவர் ரீமாசென் பின்பு சிம்புவின் வல்லவன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட வாய்ப்பை இழந்து நிற்கிறார்.

Leave a Comment