2022-ல் அதிகம் சம்பளம் வாங்கும் 5 கால்பந்து வீரர்கள் – முதல் இடத்தை பிடிக்க தவறிய மெஸ்ஸி, ரொனால்டோ..

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு விளையாட்டு மிகவும் பிரபலமாக இருக்கும் அந்த வகையில் இந்தியாவில் கிரிக்கெட் என்றால்.. மற்ற பெரும்பாலான நாடுகளில் ஃபுட்பால் தான்.. அந்த வகையில் கால்பந்து வீரர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் ஐந்து வீரர்கள் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம் ..

முதலிடத்தில் மெஸ்ஸி அல்லது ரொனால்டோ இருப்பார்கள் என நீங்கள் கணக்கு போடலாம் ஆனால் அது உண்மை இல்லை முதலிடத்தில் இருப்பவர் வேறு யாரும் அல்ல கைலியன் மப்பே தான்.. ஃபோர்ப்ஸ் நடத்திய ஆய்வின்படி இந்த ஆண்டு இவருக்கு 110 மில்லியன் டாலர் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது இடத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டுள்ளார் மெஸ்ஸி. கால்பந்து உலகில் சிறந்த இடத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி.nஇவர் அர்ஜென்டினா அணியின் கேப்டனாக வலம் வருகிறார் இவருக்கு 110 மில்லியன் டாலர்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தை பிடித்துள்ளவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடும்..

அவருக்கு இந்த ஆண்டு சுமார் 100 மில்லியன் டாலர் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது நான்காவது இடத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டவர் மெய்மர் இவர் பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அந்த அணியின் முன்னணி வீரரும் கூட.. இவருக்கு 87 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டுள்ளது .

கடைசி இடமான ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள அவர் லிவர் பூல் அணியைச் சேர்ந்த முகமது சலா. 30 வயதாகும் இவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓடி கொண்டிருக்கிறார் இந்த ஆண்டு இவருக்கு 53 மில்லியன் டாலர் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது இந்த ஐந்து வீரர்கள் தான் இந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment