தெலுங்கில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்கள்.? 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய ஒல்லி நடிகர்

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் பிற மொழிகளிலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வளர்த்து அங்கேயும் நல்ல காசு பார்க்கின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய 5 தமிழ் திரைப்படங்கள் குறித்துதான் பார்க்க இருக்கிறோம்.

1. விக்ரம் : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து உருவான இந்த திரைப்படம் பெரிய ஆக்சன் பேக் திரைப்படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. விக்ரம் திரைப்படம் தெலுங்கில் மட்டுமே 30 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது.

2. வாத்தி : சைலண்டாக திரையுலகில் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடித்த திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களை தொடர்ந்து இவர் நடித்த வாத்தி திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக 100 கோடி வசூலை நோக்கி பயணிக்கிறது இந்த திரைப்படம் தெலுங்கில் மட்டுமே 30 கோடி வசூல் அள்ளி உள்ளது.

3. காஞ்சனா 3 : நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த சில வருடங்களாக பேய் படங்களை எடுத்து வெற்றி கண்டு வருகிறார் அப்படி இவர் எடுத்து வரும் காஞ்சனா சீரிஸ் தெலுங்கில் அமோக வரவேற்பு பெற்றது குறிப்பாக காஞ்சனா 3 அங்கு மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

4. தர்பார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தபோதிலும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது தெலுங்கில் மட்டுமே இந்த திரைப்படம் 30 கோடிக்கு மேல் வசூல் அள்ளி மாபெரும் வெற்றி கண்டது.

5. கடாரம் கொண்டான் :  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் தெலுங்கில் அமோக வரவேற்ப்பை பெற்று அங்கு மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.

Leave a Comment