கெட்டவன் முதல் யோகன் வரை தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவராமல் இருக்கும் 5 படங்கள்.!

சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன இருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு நடிகர் மற்றும் இயக்குனர்களின் மோதல் அல்லது பட்ஜெட் காரணம் போன்றவற்றால் படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றன அப்படி வெளியாகாமல் இருக்கும் படங்கள் பற்றி பார்ப்போம்..

சிம்பு : 2011 ஆம் ஆண்டு சிம்பு நடித்து இயக்க இருந்த திரைப்படம் கெட்டவன் இந்த படம் ரசிகரால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது அதன் பிறகு இந்த படம் எந்திரிக்கவே இல்லை படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் த்ரில்லர்  படமாக இது உருவாக இருந்ததாக பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

அஜித் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்  அஜித் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் மிரட்டல் போஸ்டர் எல்லாம் வெளியானது ஆனால் அதன் பிறகு ஏ ஆர் முருகதாஸ் ஒரு பக்கம் ரமணா, கஜினி என படங்களை இயக்க அஜித் தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து ஓடினார் இதனால் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவே இல்லை.

விஜய் : எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் குஷி வெளிவந்து சக்கபோடு போட்டது அதனை தொடர்ந்து விஜயை வைத்து எஸ் ஜே சூர்யா புலி என்ற படத்தை எடுக்க இருந்தார் ஆனால் படத்தின் கதையில் கமர்சியல் சீன் இல்லாதால் கைவிடப்பட்டது. சிம்புதேவன் 2015 ஆம் ஆண்டு விஜய் வைத்து புலி என்ற டைட்டிலில் படத்தை எடுத்தார்.

சிம்பு : எஸ் ஜே சூர்யா அன்பே ஆருயிரே என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்தார் மறுபக்கம் சிம்பு வல்லவன் மன்மதன் போன்ற படங்களில் நடித்து வந்தார். இருவரும் முதல் முறையாக இணைந்தது அந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. சில காரணங்களால் எஸ்.ஜே சூர்யா அந்தப் படத்தை கைவிட்டார்.

விஜய் : கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த திரைப்படம் யோகன் இந்த படத்தின் கதை என்னவென்றால் பல நகரங்களில் பல வித்தியாசமான பிரச்சனைகள் நடக்கிறது இதை ஹீரோ தட்டி கேட்க வேண்டும் இது ஒரு ஸ்பை த்ரில்லர் கதையாக உருவாக இருந்தது. ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைக்க இருந்தார் திடீரென விஜய் இது தன்னுடைய இமேஜ் க்கு செட்டாகாது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனக் கூறி இந்த படத்தை நிராகரித்தார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்