சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் தான் மிகப்பெரிய வசூலை அள்ளுகிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கோம் ஆனால் உண்மையில் குறைந்த பட்ஜெட் படங்கள் தான் தயாரிப்பாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுக்கிறது அதுதான் உண்மையும் கூட அப்படி தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக வசூலை அள்ளிய 5 திரைப்படங்களை தற்போது பார்ப்போம்.
1. ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ராட்சசன் இந்த படம் திரில்லர் மற்றும் சென்டிமென்ட் கலந்த படமாக இருந்ததால் மக்களுக்கு ரொம்ப பிடித்து போய் அதிக நாட்கள் ஓடியது இந்த படம் சுமார் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இது சுமார் 28 கோடி வசூலை ஈட்டி அசத்தியது.
2. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருள் காமராஜர் இயக்கத்தில் உருவான திரைப்படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர் இந்த படம் முழுக்க முழுக்க விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது அதே சமயம் சென்டிமென்ட் கலந்து இருந்ததால் இந்த படம் அப்பொழுது சூப்பராக ஓடி வெற்றி கண்டது மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 22 கோடி வசூல் செய்தது.
3. எச் வினோத் இயக்கத்தில் முதலில் உருவான திரைப்படம் சதுரங்க வேட்டை இந்த படத்தில் நட்டி நடராஜ் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு வலு சேர்த்தார். படம் முழுக்க முழுக்க பணத்து ஆசையை பற்றிய ஒரு படமாக எடுக்கப்பட்டது அனைவருக்கும் பிடித்திருந்தது 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 25 கோடி வசூல் செய்தது.
4. விமல், பிந்து மாதவி, சூரி போன்றவர்கள் நடிப்பில் உருவான திரைப்படம் தேசிங்கு ராஜா இந்த படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக எடுக்கப்பட்டது ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் சுமார் 30 கோடி வசூல் செய்தது. 5. விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் 96 இந்த படம் முழுக்க முழுக்க காதல் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படம் ஆக எடுக்கப்பட்டு இருந்தது இந்த படத்தை பிரேம்குமார் இயக்கியிருந்தார் 16 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம் 80 கோடி வசூல் செய்தது.