5 மாவட்டங்களில் ருத்ரதாண்டவம் ஆடும் கொரோனா.? எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா.?

கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 4, 731 பேருக்கும், வெளிமாநிலத்தில் உள்ள தமிழகர்களுக்கு 76 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வகை மொத்தம் 4870 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையிலும் தமிழகத்தில் 1,65,714 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றும் மகிழ்ச்சி தரும் வகையில் இன்று ஒரேநாளில் 3,049 பேர் குணம் அடைந்துள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பேரதிர்ச்சி தரும் வகையில் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கொரோனா தாக்கம் இன்று மட்டும் அதிகமாக பரவிவுள்ளது.அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 4, 056ஆக அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி மாவட்டத்தில் 150 பேருக்கும் செங்கல்பட்,டு மாவட்டத்தில்237, தேனி மாவட்டத்தில் 138 பேருக்கும் கோரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் 192 பேருக்கும் கோரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த வகையில் பாதிப்பு 8, 236-ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment