2025 இல் தமிழ் சினிமாவில் சாதித்து காட்டிய 5 புதுமுக இயக்குனர்.! இந்த 5 படமும் மரண ஹிட்.

சினிமாவில் பணியாற்றுவதற்கு பல பிரபலங்கள் ஆர்வம் காட்டுவார்கள் அந்த வகையில் சமீபகாலமாக புது முக இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் சாதித்து வருகிறார்கள் அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு புதுமுக இயக்குனர்கள் வெற்றி கண்ட ஐந்து திரைப்படங்களை இங்கே காணலாம்.

அபி சன் ஜீவி

இயக்குனர் அபிஷன் ஜீவித்  சசிகுமார் மற்றும் சிம்ரனை வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் நடிக்கவும் செய்தார்.

கலையரசன் தங்கவேல்

கலையரசன் தங்கவேல் இயக்கிய திரைப்படம் தான் ஆண்பாவம் பொல்லாதது இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான காதல் கற்பனை நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தில் ரியோ ராஜ், மேலி, சீலா ராஜ்குமார், ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. 2025 இல் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

ராஜேஸ்வர் காளிசாமி

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் குடும்பஸ்தன் 2025 இல் வெளியான நகைச்சுவை நாடகத் திரைப்படம். நடுத்தர வாழ்க்கையில் நிதி சிக்கல்களில் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டது. வேலை இழந்து கடலில் தவிக்கும் ஒரு நடுத்தர மனிதன் கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்ப பிரச்சினைகளை எதிர்கொள்வது பற்றிய கதை. இந்த திரைப்படத்தில் மணிகண்டன் மற்றும் சாந்தி மேக்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்  2025 இல் வெளியாகிய சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

லோகேஷ் அஜில்ஸ்

லெவன் என்ற திரைப்படத்தை லோகேஷ்  இயக்கியிருந்தார் இவருக்கு இது முதல் திரைப்படம் துணிச்சலான, நேர்மையான, புத்திசாலித்தனமான அதிகாரி ஒருவர் ஒரு சிக்கலான தொடர் கொலை வழக்கில் பணி அமர்த்தப்படுகிறார் கடுமையான குற்றங்களை செய்த குற்றவாளி கொலையாளியை கண்டுபிடிக்கும் பணியில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார் இந்த திரைப்படத்தின் கதை இதுதான் இந்த திரைப்படம் வெளியாகி 2025-ல் நல்ல வரவேற்பு பெற்றது சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

கீர்த்தீஸ்வரன்

கீர்த்திசுரன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் டியூட் இது திரைப்படம் வெளியாகி ரசிகர்கலிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் படத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், ரோகிணி ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் அறிமுக இயக்குனர் கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் 2025-ல் வெளியாகிய அதிரடி காதல் திரைப்படம் இதுதான் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. 2025 இல் ஹீட் அடித்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.