குடியை விடு, படிக்க விடு என்ற வாசகத்தை ஏந்தியவாறு முதலமைச்சர் வீட்டிற்கு நடைப்பயணம் மேற்கோளும் 5 சிறுவர்கள்.!

கொரோனா வைரஸை ஒழிக்க உலக நாடுகள் இந்த நோய்க்கான எதிர்வினை ஆற்றும் மருந்தை கண்டு பிடித்து வருகின்றனர் இருப்பினும் பாதுகாப்புகாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன அதே போல இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் இந்தியா முழுவதும் தற்போது மூன்றாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது இதனால் பொதுமக்கள் பலரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க சிரமப்பட்டு வருவதை அறிந்த தமிழக அரசு ஒரு சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை  தளர்த்தியது.

இருப்பினும் ஒருசில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் தமிழக அரசு நாளை முதல் மதுக்கடையை திறக்க உள்ளனர் இதனால் பலரும் தமிழக அரசு மீது அதிருப்தியில் உள்ளனர் எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் விடாத அரசு தற்போது மதுக்கடைகளுக்கு மக்களை விடுவது வேடிக்கையாக இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்திலிருந்து ஐந்து சிறுவர்கள் டாஸ்க் கடையை திறக்க கூடாது என வலியுறுத்தி ஆகாஷ், விக்டோரியா, ஆதர்ஷ், சபரி, சுப்ரியா ஆகிய 5 சிறுவர்களும் படூர் முதல் முதலமைச்சர் இல்லம் வரை நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.இப்பயணம் 30 கிலோ மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது,  மேலும்  குடியை விடு, படிக்க விடு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டு உள்ளனர் இவர்களை அனைத்து தரப்பு மக்களும் ஆதரித்து வருகின்றனர் அதுமட்டுமில்லாமல்பிஞ்சி குழந்தைகளின் கூக்குரல் முதலமைச்சர் காதில் எட்ட வேண்டும் என பலதரப்பு மக்களும் வேண்டுகோளாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment