இந்த ஆண்டு சினிமாவை பொருத்தவரை அனைத்து திரைப்படங்களும் லாபத்தை பார்த்து வருகிறது இந்த வகையில் இந்த ஆண்டு அதிக சம்பாதித்த ஐந்து பிரபலங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
ராஜமவுலி :- பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் ராஜமவுலி கடந்த மார்ச் மாதம் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த திரைப்படம் 500 கோடி பொருட் செளவில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
கமல்ஹாசன்:- கடந்த ஜூன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் பிரபலமாக வெளியான திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்தப் படத்தை கமலஹாசன் அவர்கள் தயாரித்து உள்ளார் மேலும் இந்த திரைப்படம் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன்:- டாக்டர் திரைப்படத்திற்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த படத்தை சிவகார்த்திகேயன் மற்றும் லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரித்து இருந்தது. அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கு மேல் வாசூல் செய்து உள்ளது. இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் தனது சம்பளத்தை உயர்ந்துள்ளது.
மணிரத்தினம் :- இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படம் தற்போது வரையிலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த திரைப்படத்தை மணிரத்தினம் மற்றும் லைகா நிறுவனம் இருவரும் சேர்ந்து தயாரித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி 15 நாட்களில் 500 கோடிக்கு மேல் வாசூல் செய்து உள்ளது.
லைக்கா ப்ரொடக்ஷன் :- பிரம்மாண்ட திரைப்படங்களை அடுத்தடுத்து தயாரித்து வரும் நிறுவனம் தான் லைக்கா இந்த நிறுவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து அதிக லாபத்தை பார்த்துள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த அடுத்து ரஜினி நடிக்கும் இரண்டு படங்களை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது இதனால் ரஜினி அவர்களுக்கு இந்த இரண்டு படத்திற்கும் சேர்த்து 250 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.