கிராமத்து கதாபாத்திரங்களில் நடித்து அறிமுகமான 5 நடிகைகள்..! லிஸ்ட்டில் இருக்கும் முன்னணி நடிகை.

சினிமா உலகில் ஒரு கதாநாயகி என்ட்ரி ஆகி மென்மேலும் உயர்ந்து தனக்கான ஒரு நிரந்தர இடத்தை பிடிப்பது மிகவும் சிரமம். அப்படி தமிழ் சினிமாவில் கிராமத்து லுக்கில் இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகி தனக்கான மார்க்கெட்டை பிடித்த நடிகைகள் சிலர் இருக்கின்றனர். அந்த நடிகைகள் குறித்து பார்ப்போம்.

1.லக்ஷ்மி மேனன் : 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த கும்கி திரைப்படத்தில் மலைவாழ் கிராமத்து பெண்ணாக அறிமுகமானவர் இந்த படம் நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை அள்ளியது. மேலும் லட்சுமிமேனனுக்கும் இதைத்தொடர்ந்து பல டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2..அதிதி ஷங்கர் : முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி அண்மையில் வெளிவந்த திரைப்படம் விருமன். இந்த படத்தில் அறிமுக ஹீரோயினாக முதல்முறையாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் இவரது நடிப்பு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள மாவீரன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவரது வளர்ச்சி அடுத்தடுத்து எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

3..அமலாபால் : இவர் சிந்து சமவெளி என்ற படத்தில் கிராமத்து லுக்கில் நடித்து அறிமுகமாகி இருந்தார். இதைத்தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்திலும் கிராமத்து லுக்கில் நடித்து பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 4. ஐஸ்வர்யா ராஜேஷ் : இவர் அட்டகத்தி படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அறிமுகமானார் அடுத்து அவர் நடித்த வட சென்னை, காக்கா முட்டை போன்ற படங்களிலும் கிராமத்து சாயலில் சிறப்பாக நடித்து பிரபலமடைந்து தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

5.நயன்தாரா : தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாக ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படத்திலேயே  அவரது நடிப்பு பலரும் பாராட்டும் படி அமைந்ததால் அடுத்தடுத்து டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை கை பற்றி தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருகிறார். இந்த ஐந்து நடிகைகளும் சினிமாவில் தனது கேரியரை கிராமத்து கதாபாத்திரத்தில் ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகைகள் ஆக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment