விஜயுடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை பெருசுப்படுத்திய 5 நடிகைகள் – இந்தியில் கொடிகட்டி பறக்கும் மாடல் அழகி

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய் இவர் வாரிசு படத்தின் வெற்றியை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி திரையுலகில் ஜொலிக்கும் விஜய் உடன் நடித்து தனது சினிமா கேரியரை மிகப்பெரிய அளவில் வளர்த்துக் கொண்ட 5 பிரபலங்கள் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

1. அசின் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் விஜய் உடன் இணைந்து சிவகாசி, காவலன், போக்கிரி என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார் அதன் பிறகு இவருக்கு பிற மொழிகளில் அதிகம் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் பாலிவுடில் நடிக்க சென்று விட்டார் பிறகு அங்கேயே ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியும் விட்டார்.

2. ஸ்ரேயா : ரஜினி போன்ற டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வெற்றி கண்ட ஸ்ரேயா 2007 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் உருவான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஹிந்தி பக்கம் சென்று சில படங்களில் நடித்து அங்கு பிரபலம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இப்பொழுதும் அங்கேயே ஒன்று இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

3. ஜெனிலியா : இவர் தனது திரைப்படத்தை இந்தி படத்தின் மூலம் தான் ஆரம்பித்தார் அதன் பிறகு தமிழில் பாய்ஸ் படத்தில் நடித்திருந்தாலும் விஜயுடன் இவர் ஜோடி போட்டு நடித்த சச்சின் படம் தான் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது அதன் பிறகு இவர் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்தார்.

4. பிரியங்கா சோப்ரா : மாடல் அழகியான பிரியங்கா சோப்ரா ஆரம்பத்திலேயே ஹிந்தியில் டாப் நடிகர் படங்களில் நடித்து பிரபலமடைந்தார் தமிழில் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் உருவான தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடி போட்டு நடித்து அசத்தினார் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது இவருக்கு அனைத்து திரையுலகிலும் வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தது குறிப்பாக ஹிந்தியில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி ஓடினார். அதன் பிறகு இவர் தமிழ் பக்கமும் திசை திரும்பவே இல்லை..

5. இஷா கோப்பிகர் : தளபதி விஜய் ஆரம்பத்தில் அவரது அப்பா படங்களில் நடித்து வந்தார் அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு தேசிய சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான நெஞ்சினிலே திரைப்படத்தில் கோப்பிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். தமிழில் அடுத்தடுத்த படம் பண்ணி வந்தாலும் ஒரு கட்டத்தில் ஹிந்தி வாய்ப்பு இவருக்கு அதிகமாக கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்

Leave a Comment