2023 – ல் ஹிட் கொடுத்து கேரியரை தக்க வைத்துக் கொண்ட5 நடிகர்கள்.. மீண்டு வந்த அனகோண்டா விஷால்

இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது. பல டாப் ஹீரோக்கள் மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன குறிப்பாக 2023 –  ல் வெற்றி படத்தை கொடுத்து தப்பித்த 5 நடிகர்கள் திரும்பி இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

விஷால் : ஆரம்பத்தில் திமிரு, சண்டக்கோழி, மலைக்கோட்டை  என வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் கடந்த சில வருடங்களாக நடித்த படங்கள் சொல்லிக் கொள்ளும்படி போடவில்லை வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஷால் 2023 ல் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்த்து மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை பெற்று தந்திருக்கிறது இதிலிருந்து அவர்  வெற்றி பயணத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

365 நாட்கள் ஓடிய கரகாட்டக்காரன் வசூல் எவ்வளவு தெரியுமா.! அடேங்கப்பா அப்பவே இத்தனை கோடியா.?

ஜெய்  : ராஜா ராணி ஜெய் கேரியரில் மிகப்பெரிய வெற்றி படம் அதன் பிறகு நடித்த படங்கள் கொஞ்சம் சுமாராக ஓடினாலும் கடைசியாக நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறவில்லை இதனால் தடம் தெரியாமல் இருந்த ஜெய் 2023-ல் வெளியான லேபிள் வெப் சீரிஸ் கொஞ்சம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இதை பிடித்து அப்படியே போனால் அவருக்கு நல்ல காலம் இருக்கிறது.

அசோக் செல்வன்  : தெகிடி படத்தின் மூலம் பிரபலமான இவர் ஓ மை கடவுளே ஓரளவுக்கு பெயரை வாங்கித் தந்தது அதன் பிறகு நடித்த படங்கள் சரியாக ஓடாமல் இருந்த நிலையில் 2023 சரத்குமார் உடன் கூட்டணி அமைத்து நடித்த போர் தொழில் திரைப்படம் பெரிய ஹிட் அடித்து அடுத்தடுத்த பட வாய்ப்பு அள்ளி வருகிறார்.

விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் வெங்கட் பிரபு.. தளபதி 68 எப்போ ரிலீஸ் தெரியுமா.?

கவின் : கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் பிக் பாஸ் இவருக்கு மேலும் புகழை சம்பாதித்து கொடுத்தது வெளியே வந்து அவருக்கு லிப்ட் படம் சுமாராக ஓடினாலும் 2023-ல் வெளிவந்த டாடா திரைப்படம் அவரை வேற ஒரு தளத்திற்கு தூக்கிக் கொண்டு போய் விட்டு உள்ளது தற்பொழுது பட வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் : தோனி தயாரித்த எல்ஜிஎம் படத்தில் நடித்தார். பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்து மொக்கை  வாங்கியது அதனை தொடர்ந்து பார்க்கிங் திரைப்படத்தில் நடித்தார் இந்த படம் இந்த ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

Exit mobile version