80,90 களில் கொடிகட்டு பறந்த மூன்று ஹீரோக்களை நடுநடுங்க வைத்த 5 நடிகர்கள்.! லிஸ்ட் இதோ.

80, 90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர்கள் ரஜினி கமல் விஜயகாந்த் தான். அவர்களுக்கு தான் அதிகமான ரசிகர்களும் இருந்தனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் சரசரவென ஹிட் படங்களை கொடுத்து ரஜினி கமல் விஜயகாந்துக்கே ஆச்சரியத்தை கொடுத்த ஐந்து நடிகர்களும் இருந்தனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

1. 80, 90 களில் தொடர்ந்து செண்டிமெண்ட், காதல் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் மைக் மோகன். இவர் முதலில் மூடுபனி படத்தின் மூலம் ஹோலிவுட்டியில் அறிமுகமானார் தொடர்ந்து இவர் நடித்த மௌன ராகம், நூறாவது நாள், மெல்ல திறந்தது கதவு போன்ற படங்கள் ஹிட் அடித்தன இதனால் மைக் மோகன் கமலுக்கு இணையாக அப்பொழுது பேசப்பட்டவர்.

2. கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தவர்நடிகர் சுதாகர். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக இருந்தது அதன் பின் மாந்தோப்பு கிளியே, பொண்ணு ஊருக்கு புதுசு, கரை கடந்த ஒருத்தி, நிறம் மாறாத பூக்கள் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வெற்றி நாயகன் என பெயரை பெற்றார்.

3. எம்ஜிஆரை தொடர்ந்து அவரது ஸ்டைலை பிரதிபலித்தவர் ராமராஜன் தொடர்ந்து கிராமத்திய கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டவர் ராமராஜன். ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகரும் இவர்தான் இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் 300 நாட்களுக்கு மேல் ஓடி அசதியது இவரது படங்கள் வரும் போது  ரஜினி, கமல் சற்று பயந்தனர்.

4. ராஜ்கிரண்  தயாரிப்பாளராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஹிரோவாக களம் இறங்கியவர் ராசாவின் மனசினிலே, எல்லாமே என் ராசாதான், அரண்மனைக்கிளி போன்ற படங்கள் அனைத்தும் 100 நாட்கள் ஓடியது இவரது ஆக்ஷன் சீன்களை பார்க்க அப்பொழுது ரசிகர்கள் திரையரங்கை நாடினர்.

ஒருமுறை ரஜினியே இவருக்கு நேரடியாக போன் செய்து படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க சொல்லி உள்ளார் அந்த அளவிற்கு அப்பொழுது பிரபலமாக இருந்தார். 5. முரளி தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட கதைகளில் நடித்து பிரபலமடைந்தார் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்களாக மாறின அதனால் ரஜினி விஜயகாந்த் வரிசையில் இவரது பெயரும் அப்பொழுது பேசப்பட்டது.

Leave a Comment