எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் கரைத்துக் குடிக்கும் 5 நடிகர்கள்..! இதுலயும் ஒருத்தர் வேற லெவல் தான்..!

தமிழ் சினிமாவில் கதாநாயகன் காமெடி நடிகர் வில்லன் குணச்சித்திர வேடம் என்று எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் சில நடிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு ஐந்து நடிகர்கள் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் கரைத்து குடிப்பதில் வல்லவர்கள் அவர்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

நடிகர் விஜய் சேதுபதி இவர் சினிமாவில் அறிமுகமாகும் போது முதலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தான் அறிமுகமானார் பின்னர் தன்னுடைய கடின உழைப்பின் மூலமாக கதாநாயகனாக காட்சியளித்தது மட்டுமில்லாமல் தற்போது பல திரைப்படங்களில் வில்லனாகவும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி வருகிறார்.

நடிகர் பகத் பாசில் இவர் மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் கூட போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருப்பார் அதேபோல தற்போது கமல் நடிக்கும் விக்ரம் திரை படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மற்றொரு வில்லனாக நடிக்க உள்ளார்.

எம்எஸ் பாஸ்கர் இவர் நாடக பின்னணியிலிருந்து சினிமா துறையில் என்ட்ரி ஆனவர் தற்போது இவருக்கு வயது முதிர்ந்தாலும் சரி எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் இன்றுவரை மிக சிறப்பாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர் சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் ஆவார் ஏனெனில் இவர் வில்லனாக நடித்த எந்த ஒரு திரைப்படமும் இன்றுவரை தோற்றது கிடையாது அந்த வகையில் இவர் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளார்.

நடிகர் சத்யராஜ் இவர் திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் வில்லனாகவும் நடித்துள்ளார். அந்தவகையில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் கலக்குவது மட்டுமில்லாமல் ஆக்ஷனிலும் இறங்கி விளையாடுவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரத்தை இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி இருப்பார்.

Leave a Comment