சரக்கை மோந்து கூட பார்க்காத 5 நடிகர்கள் – லிஸ்ட்டில் இருக்கும் இளம் ஹீரோ..!

0
tamil-actors-
tamil-actors-

உலகில் இருக்கும் நடிகர்கள் அனைவரும் படங்களில் எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதது போல நடிப்பது வழக்கம் ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது ஒரு சில நடிகர்கள் குடிப்பழக்கத்தை வைத்து இருக்கின்றனர். ஆனால் ஒரு சில நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து இருக்கின்றனர் அவர்கள் யார் யார் என்பது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.

1. சினிமா உலகில் டெரர் வில்லனாக பேசப்பட்டவர் நடிகர் நம்பியார் இவர் சிவாஜி, எம்ஜிஆர் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர். சினிமாவில் குடிப்பது போல நடித்தாலும் நிஜ வாழ்க்கையில அவர் அதை தொட்டதே கிடையாது எனக் கூறப்படுகிறது ஏன் அவர் அசைவம் கூட சாப்பிட பிடிக்காதாம்.

2. தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன், குணத்திர கதாபாத்திரம் என அனைத்திலும் நடித்து வெற்றி கண்டவர் பிரசன்னா இவர் சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இப்பொழுது ஒன்று, இரண்டு திரைப்படங்கள் தான் கைவசம் இருக்கின்றன இவர் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருக்கிறார்.

3. தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்றால் அது ஜெய்சங்கர் தான் இவர் நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் நேர்மையாக இருந்தவர்.

4. 70 காலகட்டங்களில்  எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பிரபலம் அடைந்தவர் அசோகன் இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பு வெற்றி பெற்றவர் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான விசுவாசி இவருக்கு குடிப்பாக்கம் என்பது அறவே கிடையாதாம். 5. எம்ஜிஆர் சிவாஜி காலத்திலிருந்து சினிமா உலகில் இருப்பவர் சிவக்குமார். சினிமா உலகில் குடிகாரனாக  நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அதற்கு எதிர் மாறாக இருப்பவர்.