மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்களை அலற விட்டு ஏமாற்றிய 4 திரைப்படங்கள்…

ஒரு சில திரைப்படங்கள் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போகிறது என்ற உடனே ரசிகர்கள் மத்தியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி விடும். ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு ஒரு சில பிரச்சனையின் காரணமாக பாதிலேயே நிறுத்தப்பட்ட திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

மருதநாயகம்:- இப்போதும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரே திரைப்படம் மருதநாயகம் திரைப்படம் தான். இந்த படம் வரலாற்று கதை அம்சம் கொண்டு எடுக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் அவர்கள் சொந்த தயாரிப்பில் தயாரித்து நடிக்க இருந்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட பண பிரச்சனை காரணமாக இந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்று வரையிலும் குறையாமல் இருந்து வருகிறது.

ராணா :- கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருந்த இந்த திரைப்படம். ரஜினி அவர்களின் உடல்நிலை சரியில்லாததால் இந்த படத்தைப் பாதியில் நிறுத்தப்பட்டது. இருந்தாலும் கிடப்பில் போடப்பட்டு பல வருடங்கள் ஆகியும் மீண்டும் தொடங்காமல் இருக்கிறது.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி.:- காமெடி நடிகர் வடிவேலுவின் நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து சிம்பு வாசுதேவன் மீண்டும் வடிவேலை வைத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் இந்தப் படம் ஆரம்பிக்கும் சமயத்தில் வடிவேலுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த படம் பாதியில் கைவிடப்பட்டது.

சபாஷ் நாயுடு:- கடந்த 2014 ஆம் ஆண்டு கமல், சுருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாக இருந்த இந்த திரைப்படம் ஒரு சில பிரச்சனையின் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்த படம் தசாவதாரம் திரைப்படத்தில்  பல்ராம் நாயுடு என்ற கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது இதனால் அந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மட்டும் ஒரு தனி படமாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சபாஷ் நாயுடு என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார்கள் ஆனால் இந்த படம் பாதையில் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment