விருது வாங்கிய அசுரன் திரைப்படத்தில் நடிக்க முடியாது என வெறுத்து ஒதுக்கிய 4 முன்னணி நடிகர்கள்.! இப்ப புலம்பி என்ன பயன்.!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருமாறி இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் சொல்லப்போனால் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் அனைத்து திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது.

இவர்கள் கூட்டணியில் வெளியாகிய பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம் அசுரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதிலும் கடைசியாக வெளியாகிய அசுரன் திரைப்படம் தேசிய விருதை தட்டிச் சென்றது.

asuran
asuran

அசுரன் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரித்திருந்தார் இந்த திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதற்கு முன்பு வெற்றிமாறன் இந்த கதையை நான்கு முன்னணி நடிகர்களிடம் வரிசையாக கூறியுள்ளார். ஆனால் அந்த முன்னணி நடிகர்கள் இதெல்லாம் ஒரு கதையா என நிராகரித்து விட்டது போல் கூறியுள்ளார்கள்.

அதிலும் ஒருசில நடிகர் இந்த கதையில் நடித்தால் என்னுடைய இமேஜ் என்ன ஆகும் என கூறி  நிராகரித்துள்ளார். அதிலும் ஒரு நடிகர் வயதான கதாபாத்திரத்தில் நடித்தால் அவ்வளவுதான் என கூறினாராம். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் வெற்றிமாறன் மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

ஆனால் அசுரன் திரைப்படத்தை எந்த முன்னணி நடிகர்கள் நிராகரித்தார்கள் என்பதை மட்டும் கூறவில்லை. அதனால் அந்த முன்னணி நடிகர்கள் நான்கு பேர் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விட்டது ஆனால் தற்பொழுது அசுரன் திரைப்படம் விருது வாங்கியதால் அய்யயோ மிஸ் பண்ணி விட்டோமே என அந்த நான்கு முன்னணி நடிகர்களும் வருந்துகிறார்கலாம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment