நான்கு ஹீரோக்கள் நான்கு நடிகைகள் கௌதம் மேனன் இயக்கும் புதிய திரைப்படம்.!

0

கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், இவர் இயக்கத்தில் எண்ணை நோக்கி பாயும் தொட்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது, இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன் பல பிரச்சனைகளை சந்தித்து உள்ளது, அனைத்து பிரச்சனைகளையும் உடைத்தெறிந்து விட்டு அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது, இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் செக்கச்சிவந்தவானம் திரைப்படத்தை போல் நான்கு முக்கிய ஹீரோக்களை வைத்து புதிய படத்தை இயக்கயிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்திற்காக நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்யும் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, படத்திற்காக 4 ஹீரோக்களை தேர்வு செய்துள்ளார்கள், மாதவன், சிம்பு, மாரி 2 திரைப்படத்தில் நடித்த டோவினோ புனித் ராஜ்குமார், ஆகியவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

மேலும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது, விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள் படக்குழு.