பொங்கல் ரேசில் இருந்து விலக போகும் 4 படங்கள்.! அந்தரத்தில் தொங்கும் சிவகார்த்திகேயனின் அயலான்

பண்டிகை நாட்களில் மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்க பல படங்கள் ரிலீஸ் ஆகும் ஆனால் ஒரு சில படங்கள் தேதியை குறிப்பிட்டு பின்வாங்குவது உண்டு அப்படி வருகின்ற 2024 பொங்கல் ரேஸிலிருந்து  வெளியாகும் 4 படங்கள் பற்றி பார்ப்போம்..

சார்பட்டா பரம்பரை, நட்சத்திர நகர்கிறது ஆகிய படங்களை இயக்கி வெற்றி கண்ட பா. ரஞ்சித் சியான் விக்ரமுடன் கூட்டணி அமைத்து தங்கலான் படத்தை எடுத்துள்ளார் படம் முழுக்க முழுக்க தங்க சுரங்கத்தில் மக்கள் பட்ட கஷ்டங்கள் மற்றும் வாழ்க்கை முறையை இந்தப்படம் பேசி உள்ளது பொங்கலுக்கு வெளியாகும் என கூறிய நிலையில் தற்போது படம் அதிலிருந்து விலகி குடியரசு தினத்தை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக பேச்சுக்கள் வெளி வருகின்றன.

இன்று தொட முடியாத உயரத்தில் இருக்கும் ரஜினியின் முகத்தில் பிரபல இயக்குனர் காரி துப்பிய சம்பவம் தெரியுமா.!

பேய் படங்கள் எடுப்பதில் ரொம்பவும் கைதேர்ந்த இயக்குனர் சுந்தர். சி  அரண்மனை சீரிஸ் எடுத்து வருகிறார் அந்த வகையில் அரண்மனை 4 பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் படத்திற்கான மொத்த வேலையும் இன்னும் இரண்டு மாதத்தில் முடிப்பது சந்தேகம் என்பதால் படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு இல்லை என புறப்படுகிறது.

நடிகர் சூர்யா கைவிட்ட பிறகு வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது.

வாய திறந்தாலே கூவம் ஆறு ஓடும்.. கெட்ட வார்த்தையில் விஜய்யை ஓரங்கட்டிய 6 நடிகைகள்.!

பல வருடங்களாக கிடப்பில் கிடக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறியது தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என உறுதியாக சொல்லி உள்ளது ஆனால் இந்த சமயத்தில் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் பஞ்சாயத்து பெரிசாக வெடித்துள்ளதால் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்பது தெரியவில்லை..

Exit mobile version