நடிப்பில் கமலஹாசனையே தூக்கி சாப்பிட்ட 4 நடிகைகள்..! பல மேடைகளில் சொல்லி பாராட்டும் உலக நாயகன்

Kamal : நடிப்பிற்கு பெயர் போன உலக நாயகன் கமலஹாசன் சினிமா உலகில்  நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கி வருகிறார். தற்போது இருக்கும் பல இளம் நடிகர்கள் கமலஹாசனை ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அந்த அளவிற்கு பல பேரிடம் பேரையும் புகழையும் சம்பாதித்தவர். இப்படிப்பட்ட நடிகர் கமலஹாசன் அவரோடு நடிக்கும் சக நடிகைகள் சிலரின் நடிப்பை அவரே வியந்து பாராட்டியும் உள்ளாராம்.. அந்த நடிகைகள் யார் யார் என்பதை பற்றி பார்ப்போம்.

ஊர்வசி : இவர் தற்போது டாப் ஹீரோ படங்களில் முக்கிய மற்றும் அம்மா, சித்தி வேடங்களில் நடித்து வருகிறார்.  ஊர்வசி ஆரம்பத்தில் மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும் போன்ற படங்களில் கமலஹாசன் உடன் சேர்ந்து  நடித்திருப்பார்.   ஊர்வசியின் நடிப்பை  பல மேடைகளில் கமலஹாசன் பாராட்டியிருக்கிறார்.

நடிகை சரிதா : கமலஹாசன் சரிதா உடன் இணைந்து மாரோ சரித்ரா திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டவர். தற்போதும் தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகிறார். அண்மையில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் கூட சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தன் நடிப்பை மிஞ்சும் அளவிற்கு நடிகை சரிதா சூப்பராக நடிக்க கூடியவர் என கமலஹாசன் பலமுறை பாராட்டி இருக்கிறார்.

வடிவுகரசி : உலக நாயகன் கமலஹாசன், ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் வடிவுக்கரசி. இவர் இன்றளவும் வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவுகரசி நடிப்பு குறித்து உலகநாயகன் கமலஹாசன் மட்டுமல்லாமல் பல முன்னணி பிரபலங்களும் பாராட்டி இருக்கின்றனர்.

கோவை சரளா : ஆரம்ப காலகட்டத்தில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து காமெடி குயின்னாக திகழ்ந்தவர் கோவை சரளா. இவர் கமலஹாசன் உடன் இணைந்து சதிலீலாவதி என்னும் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பற்றியும் கமலஹாசன் பட மேடைகளில் புகழ்ந்து பேசி இருக்கிறார்.

Leave a Comment