எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து மறைந்த 3 வில்லன்கள் – ந்ம்பியாரையே மிஞ்சிய நடிகர்.!

சினிமா உலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் படங்களில் நல்லவர்கள் போன்று தோன்றலாம் ஆனால் உண்மையில் ஒரு சில நடிகர்கள் அதற்கு எதிர் மாறாக இருந்தும் உள்ளனர். சினிமா உலகில் ஹீரோக்களையும் தாண்டி வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் சிலர் எந்த ஒரு கெட்டப்பழக்கமும் இல்லாமல்  நிஜ வாழ்கையிலும் இருந்து வந்துள்ளனர். அந்த பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம். அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருபவர் நடிகர் நம்பியார்.

1. நம்பியார் 60 70 காலகட்டங்களில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த சிவாஜி எம்ஜிஆர் போன்ற நடிகரின் படங்களில் வில்லனாகவும் நடித்து பிரபலமடைந்தவர் ஆனால் நிஜ வாழ்க்கையில் நடிகர் நம்பியார் பக்தி அதிகம் உடையவராகவும் எந்த ஒரு குடிப்பழக்கமும் தீய பழக்கமோ இல்லாமல் ஒரு நல்ல மனிதராக வாழ்ந்துள்ளார்.

2. தேங்காய் சீனிவாசன் : இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சீனிவாசன் முதல் படத்தில் தேங்காய் வியாபாரி ஆக நடித்ததால் அவரை சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் தேங்காய் சீனிவாசன் என செல்லமாக அழைப்பதுண்டு. சினிமா உலகில் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து ஓடியவர் குடிப்பழக்கம் இல்லாத இவர் 50 வயதில் மூளையில் ரத்த கசிவு காரணமாக இயற்கை எய்தினார்.

3 பி எஸ் வீரப்பா  : சினிமா உலகில் தயாரிப்பாராகவும் வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.வில்லன் கதாபாத்திரத்தில் மற்ற வில்லன்களை விட இவருக்கு என ஒரு ஸ்பெஷல் இருக்கிறது இவரது கரத்த குரல் பலருக்கும் பயத்தையும் ஆச்சரியத்தையும் கொடுக்குமாம் இவர் வில்லனாக வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் சபாஷ் சரியான போட்டி என்ற வசனத்தை பேசி இருப்பார்.

மஹாதேவி படத்தில் மணந்தால் மஹாதேவி இல்லையென்றால் மரண தேவி போன்ற சிறப்பான வசனங்களை பேசியவர் இவர் குடிப்பழக்கம் இல்லாமல் நிஜ வாழ்க்கையில் வாழ்ந்தவர் ஆனால் படம் என்று போய்விட்டால் சம்பள விஷயத்தில் ரொம்ப கரராக இருக்க கூடியவராம்

Leave a Comment