தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்கள் வெளிவந்து 200 கோடி மேல் வசூல் அள்ளி பார்த்திருக்கிறோம் ஆனால் வெகு குறைந்த நாட்களிலேயே 200 கோடியை தொட்ட திரைப்படங்கள் எந்தெந்த படங்கள் என்பது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் கபாலி இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது.
இந்த படம் ரிலீசான சில நாட்களிலேயே 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது. அமெரிக்காவில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடியும் மேல் வசூல் அள்ளியதாம் மேலும் கபாலி படத்தின் வசூல் 1000 கோடி வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பேட்டியில் சொன்னார்.
2. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி கண்ட திரைப்படம் 2.0 இந்த திரைப்படம் 500 கோடி பொருள் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவானது. இந்த படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியது ஒட்டுமொத்தமாக 800 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது இந்த படம் சில நாட்களிலேயே 200 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைத்தது.
3. இயக்குனர் மணிரத்தினம் பிரம்மாண்ட பொருட் செலவில் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி வருகிறது மூன்று நாள் முடிவில் மட்டுமே இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 230 கோடி வசூல் அள்ளி இருக்கிறது. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என தெரிய வருகிறது. இதனால் பொன்னியின் செல்வன் படக்குழு இப்பொழுது செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறதாம்..