சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த 3 முன்னணி நடிகர்கள்.! யார் யார் தெரியுமா.?

நடிகர் சூர்யா தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் எப்பொழுதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளன அடுத்து இவர் நடிக்கும் திரைப்படங்கள் சிறந்த இயக்குனர்கள் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கை கொடுத்து மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடித்து வருகிறார் இது சூர்யாவிற்கு 41-வது திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்த படமும் கன்னியாகுமரி தூத்துக்குடி அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தை முடித்த பிறகு அடுத்தடுத்த பல்வேறு படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படம் குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது அதாவது கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் காக்க காக்க.

இந்த படம் அப்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன் மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது இந்த படத்தில் சூர்யா ஜோதிகா மற்றும் பல டாப் பிரபலங்கள் நடித்து இருந்தனர். இந்த படத்திற்காக தாறுமாறாக தனது உடம்பை முறுக்கேற்றி அருமையாக நடித்திருந்தார் இந்த படத்திற்குப் பிறகு இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது உண்மையில் காக்க காக்க திரைப்படம் சூர்யாவிற்கான பொருந்திய கதையாகும் முதலில் கௌதம் மேனன்.

இந்த படத்தின் கதையை அஜித்திடம் கூறியுள்ளார் அவர் நோ சொன்ன பிறகு விக்ரமிடம் இந்த கதையை போய் சொல்லி உள்ளார். அவரும் இந்த கதையை நிராகரித்த பின் தளபதி விஜய்யிடம் காக்க காக்க படத்தின் கதையை கூறியுள்ளனர் அவருக்கும் இது பிடிக்காத காரணத்தினால் நான்காவதாக தான் சூர்யாவுக்கு இந்த கதை போய் உள்ளது அவருக்கு பிடித்து போனதால் இந்த படத்தில் துணிந்து நடித்தார். அவர் நினைத்தது போலவே படமும் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்ததாம். மூன்று டாப் நடிகர்களை தாண்டி தான் நான்காவதாக சூர்யாவுக்கு இந்த திரைப்படம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment