மூன்று தலைமுறையாக தமிழ் சினிமாவை ஆட்டி படைக்கும் நடிகர்கள்.! இதோ முழு லிஸ்ட்

திரையுலகில் பெரும்பாலும் நடிகர்,நடிகைகள் எளிதாக பிரபலம் அடைவதற்கு காரணம் இவர்களுடைய தந்தையோ அல்லது அப்பாவின் அப்பாவோ தான் முக்கிய காரணமாக இருப்பார்கள். பெரும்பாலான நடிகர்கள் யாருடைய உதவியின் மூலமாகதான் திரையுலகிற்கு அறிமுகமாகுவார்கள்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர்களின் அப்பாவோ அல்லது அப்பாவின் அப்பா மூலமாக திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமடைந்த நடிகர்களின் லிஸ்டை பார்ப்போம் அந்த வகையில் முதலில்,

கார்த்திக் – இவருடைய அப்பா முத்துராமன் இவரின் மூலம்தான் கார்த்திக் திரையுலகிற்கு அறிமுகமானார். கார்த்திக்குக்கு அடுத்ததாக கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபல நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விக்ரம் – விக்ரம் நடிகரின் அப்பா வினோத் ராஜ் இவரின் மூலம்தான் திரையுலகிற்கு விக்ரம் அறிமுகமானார். விக்ரமிற்கு அடுத்ததாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்பொழுது தான் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்து உள்ளார்.

vikram-father
vikram-father

முரளி – இவருடைய அப்பா சித்தலிங்கம் இவர் கன்னட திரையுலகின் டைரக்டர் ஆவார். இவரின் மூலம் தான் முரளி தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இவரை தொடர்ந்து இவருடைய மகன் அதர்வா முரளி திரையுலகிற்கு அறிமுகமாகி முன்னணி நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

murali
murali

அர்ஜுன் – நடிகர் அர்ஜூனின் அப்பா சக்தி பிரசாத் இவர் கன்னட நடிகர் ஆவார். இவரின் மகன்தான் அர்ஜுன் இவரை தொடர்ந்து இவருடைய மகள் ஐஸ்வர்யா அருண் தற்பொழுது திரையுலகின் பிரபல முன்னணி நடிகையாக திரையுலகில் கலக்கி வருகிறார்.

ஆனந்த் பாபு – நடிகர் ஆனந்த் பாபுவின் அப்பா நாகேஷ் இவரின் மூலம்தான் ஆனந்த்பாபு திரையுலகிற்கு அறிமுகமானார் .ஆனந்த்பாபுவை தொடர்ந்து இவருடைய மகன் பிஜேஷ்  திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலம் அடைந்துள்ளார்.

உமா ரியாஸ் – நடிகர் உமா ரியாஸ்  இவருடைய அப்பா கமல் கணேஷ் இவரின் மூலம்தான் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானார். இவரை தொடர்ந்து உமா ரியாசின் மகன் ஷரிஃ கான் இவர் தற்போது சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்னா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்து பட்டி தொட்டி எங்கும் கலக்கி வருகிறார்.

லட்சுமி – நடிகை லட்சுமியின் அம்மா குமரி ருக்மணி இவர் நடித்து வந்த காலத்தில் பிரபல முன்னணி நடிகையாக திரையுலகில் கலக்கி வந்தார். அதன் பிறகுதான் லக்ஷ்மி திரையுலகிற்கு அறிமுகமானார் இவரை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமடைந்துள்ளார்.

பிரபு – நடிகர் பிரபுவின் அப்பா சிவாஜி கணேசன் இவரின் மூலம்தான் திரையுலகில் அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகராக பிரபு திரையுலக வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார் இவரைத் தொடர்ந்து தற்போதைய இளம் நடிகர் விக்ரம் பிரபு  முன்னணி நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Leave a Comment