புது வருட வாழ்த்துகளைத் தெரிவித்து பல புதிய படத்தின் போஸ்டர்கள் வெளியானது.
2026 ஆம் ஆண்டு நியூ இயர் நேற்று இனிதே பிறந்தது வழக்கம்போல் இந்த புத்தம் புது வருடத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரவேற்றார்கள். இந்த வருடம் யாருக்கு இனிமையாக இருக்கப் போகிறது என்பதை போகப் போக தெரிந்து கொள்ளலாம்.
வழக்கம்போல் நேற்றைய புத்தாண்டு நாளில் பல தமிழ் திரைப்படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டார்கள். அதாவது புதிய போஸ்டர்களை வெளியிட்டு படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டு ஹாப்பி நியூ இயர் கூறினார்கள். அப்படி புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறிய சில திரைப்படங்களின் லிஸ்டை இங்கே காணலாம்.
“டிமாண்டி காலனி 3, டபுள் கேம், இதயம் முரளி, கடற்கரை பட்டிணம், கருப்பு, மாய பிம்பம், மகுடம், மனிதன் தெய்வமாகாலாம், நிறம், பூக்கி, ரூட், செவல காள, ஸ்வயம்பு, டிரைன், தலைவர் தம்பி தலைமையில், வாத்தியார் குப்பம் 2, வட மஞ்சுவிரட்டு, வங்காள விரிகுடா, வித் லவ்”, உள்ளிட்ட படங்களின் போஸ்டர்களை அந்தந்த அப்டேட்களுடன் வெளியிட்டார்கள்.