2023 தீபாவளியை குறி வைக்கும் 5 படங்கள்.. யார் வந்தாலும் மோதிப் பார்க்க நாங்க ரெடி திமிரும் “ஜெயிலர்”

0
jailer
jailer

விசேஷ நாட்களில் டாப் ஹீரோக்கள் படங்கள் வெளிவந்து போட்டி போடுகின்றன. கடந்த பொங்கலை முன்னிட்டு கூட அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின. இதனைத் தொடர்ந்து வருகின்ற தீபாவளியை குறிவைத்து மொத்தம் ஐந்து திரைப்படங்கள் மோதுகின்றன இதனால் இந்த தீபாவளி வின்னர் யார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தீபாவளிக்கு வர இருக்கும் 5 படங்கள் குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

1. இந்தியன் 2  : பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்ற ஷங்கர் உடன் உலக நாயகன் கமலஹாசனுடன் கூட்டணி அமைத்து இந்தியன் படத்தை எடுத்தார் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகம் பல வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது ஆனால் ஆரம்பத்திலேயே சூட்டிங்கில் பல விபத்துகள் ஏற்பட நின்றுவிட்டது சிறு இடைவெளிக்கு பிறகு லைகா நிறுவனம் அனைத்தையும் சுமூகமாக கையாண்டு தற்பொழுது மீண்டும் படத்தை தொடங்கியுள்ளது. இந்தியன் 2 படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

2. ஜெயிலர் : ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகிய வருகிறது அதே சமயம் இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது ஏனென்றால் தொடர்ந்து ஸ்டுண்ட் புகைப்படங்கள் லீக் ஆகிய வண்ணமே இருக்கின்றன. ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா ரம்யா கிருஷ்ணன் மிகப்பெரிய ஒரு நட்சத்திர திரைப்பட அளந்து நடித்துள்ளது படம் தீபாவளியை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.

3. AK 62 : அஜித்தின் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அஜித் AK 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என லைக்கா நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறது.

4. மாவீரன் : சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்றதை தொடர்ந்து அடுத்த ஒரு ஹிட் படத்தை கொடுக்க மடோன் அஸ்வின் இயக்கத்தில்   மாவீரன் திரைப்படத்தில் நத்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறதாம்.

5. சூர்யா 42  : ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரியன் 42 திரைப்படம் மிகப்பெரிய ஒரு படமாக உருவாகி வருகிறது இதில் சூரிய பல்வேறு கட்டபுகளில் நடிகரா எனவும் சொல்லப்படுகிறது படம் தீபாவளி முன்னிட்டு கோலாகலமாக படக்குழு ரிலீஸ் செய்ய இருக்கிறதாம்..