2023 Tamil Movies: 254 படங்கள் வெளியானது.. ஆனால் 9% மட்டுமே லாபம்.! மாஸ் காட்டிய 5 நடிகர்கள்

Tamil Movies List 2023: 2023ஆம் ஆண்டான இந்த ஆண்டு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளியானது அப்படி இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு அதிக வருமானம் கிடைத்த நிலையில் 3500 கோடிக்கு அதிகமான வியாபாரம் செய்யப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார்.

இளம் நடிகர்களின் படங்கள் முதல் முன்னணி நடிகர்களின் படங்கள் வரை தொடர்ந்து ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறைந்த பட்ஜெட்டில் வெளியான திரைப்படங்கள் கூட பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் சமீப பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

எங்க அம்மாவுக்கு மட்டுமில்ல எனக்கு உன்னை பிடிக்கல.. மகாவை அடித்து துரத்திய சூர்யா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

அப்படி இந்த வருஷம் ஒட்டு மொத்தமாக 254 படங்கள் தமிழில் வெளியாகி உள்ளனர். ஒரு வாரத்துக்கு கணக்கிட்டு பார்த்தால் சுமார் ஐந்து படங்கள் வரை வெளியாகி உள்ளனர் என்ற கணக்கு பண்ண முடிகிறது. ஆனால் இதில் வெற்றி சதவீதம் என பார்த்தால் வெறும் 9 சதவீதம் மட்டுமே என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 254 படங்களில் வெறும் 24 படங்கள் மட்டுமே லாபம் அடைந்திருப்பதாகவும் மீதமுள்ள 220க்கும் மேற்பட்ட படங்களை நஷ்டத்தை தந்திருப்பது மிகப்பெரிய வேதனைக்குரிய விஷயம் என கூறியுள்ளார்.

மேலும் 15க்கும் மேற்பட்ட நல்ல கதை அம்சம் கொண்ட விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற படங்களையும் மக்கள் புறக்கணித்திருப்பது பெரும் சோகம். 100 கோடிக்கும் மேல் சுமார் 9 படங்கள் வசூல் செய்துள்ளது அதில் மாவீரன், மார்க் ஆண்டனி, வாத்தி உள்ளிட்ட படங்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக துணிவு, 300 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக படமாக வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2.  அதிகபட்சமாக 600 கோடி வசூலை ஜெயிலர் மற்றும் லியோ இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளது.

மீனாவை சமையல்காரி போல் நடத்தும் குடும்பம்.. முத்து வாங்கிட்டு வந்த தந்தூரி சிக்கன் – சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

இதனை அடுத்து நயன்தாராவின் அன்னபூரணி உள்ளிட்ட படங்கள் ஒரு கோடி கூட வசூல் செய்யாமல் சொதப்பியது. அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவின் வியாபாரம் 4000 கோடியை தாண்டும் என்று கூறியுள்ளார். 500 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திய படங்கள் என்றால் டாடா, குட் நைட், ஜோ, பார்க்கிங் மற்றும் அயோத்தி தான் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version