2023 : முதல் 20 நாளில் அதிக வசூல் செய்த 5 தமிழ் திரைப்படங்கள்.!

2023 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் முதல் 20 நாளில் அதிக வசூல் செய்த 5 படங்களை பற்றி பார்ப்போம்..

1. ஜெயிலர் : ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படம்  ஆகஸ்ட் பத்தாம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் ஆக்சன், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து காட்சிகளும் சிறப்பாக இருந்ததால் ரசிகர்களை தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை ஆடி வருகிறது ஜெயிலர் படம் 20 நாள் முடிவில் உலக அளவில் 581.10 கோடி வசூல் செய்தது.

2. பொன்னியின் செல்வன் : லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கி தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். படம் ஒரு வரலாற்று கதை என்பதால் படத்தை ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர் படம் சிறப்பாக இருந்ததால் அனைவரது மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று அதிக நாட்கள் ஓடியது இந்த திரைப்படம் 20 நாள் முடிவில் மட்டும் உலக அளவில் 325.08 கோடி வசூல் செய்தது.

3. வாரிசு : வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படம் தான் இருந்தாலும் படத்தில் விஜயின் மாஸ் டயலாக், ஆக்சன் போன்றவை கைதட்டல் வாங்கியது. படம் அதிக நாட்கள் ஓடி 300 கோடிக்கு மேல்  அள்ளியது இந்த படம் வெளிவந்து 20 நாட்களில் மட்டும் உலக அளவில் சுமார் 280.30 கொடி வசூல் செய்தது.

4. துணிவு : ஹச். வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து அஜித் நடித்த திரைப்படம் துணிவு.  பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக இந்த திரைப்படம் எடுத்துக் காட்டியது படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார், மகாநதி ஷங்கர், ஜான் கொக்கன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் வெளியாகி 20 நாட்களில் மட்டும் உலக அளவில் 188.27 கோடி வசூல் செய்தது.

5. வாத்தி : வெங்கி அட்லூரி இயக்கத்தில்  தனுஷ் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருந்ததால்  டைரக்டாக பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதனால் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வசூல் பார்த்தது 20 நாட்கள் முடிவில் மட்டும் 107.85 போடி வசூல் செய்தது.