Jawan Movie : 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படமும் வெளியாகி வெற்றி பெற்றது அதை தொடர்ந்து ஆதி புருஷ், பொன்னியன் செல்வன் 2, மாவீரன், மாமன்னன், ஜெயிலர் போன்ற பல படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தன.. இந்த லிஸ்ட்டில் அட்லீயின் ஜவான் படமும் இணையும்..
இந்த நிலையில் இந்தாண்டு வெளிவந்த படங்களில் உலக அளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.. 1. ஆதிபுருஷ் : ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் உலக அளவில் முதல் நாளில் 136.84 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
2 ஜவான் : அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி போன்ற பலர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த திரைப்படம் திரையரங்கில் வெற்றி நடை கண்டு வருகிறது. ஜவான் படம் முதல் நாளில் உலக அளவில் 125.05 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
3. பதான் : ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார்.. இந்த படம் உலக அளவில் முதல் நாளில் 105 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது..
4. ஜெயிலர் : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் உலக அளவில் முதல் நாள் 95.75 கோடி வசூல் செய்திருக்கிறது.
5. பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் முதல் நாளில் 61.53 கோடி வசூல் செய்திருக்கிறது.