2022 – பாதியில் அதிக வசூலை குவித்த டாப் 5 படங்கள் – லிஸ்ட்டில் இடம்பெற்ற அஜித், விஜய்.! முதல் இடத்தில் யார் தெரியுமா.?

2022 ஆம் ஆண்டின் அரை இறுதி பாதி இன்றுடன் முடிவடைகிறது. இந்த அரை ஆண்டில் டாப் 5 யில் இடம் பிடித்து அதிக வசூலை அள்ளிய  திரைப்படங்களைப் பற்றி பார்ப்போம். தமிழகத்தில் அதிக வசூலை அள்ளி முதல் இடத்தை பிடித்த திரைப்படம் விக்ரம். இந்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியாகியது.

படம் தற்போது உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளி தமிழகத்தில் மட்டும் 170 கோடி வசூலை பெற்று முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ்  நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 படம்.

உலக அளவில் 1250 கோடி வசூலை அள்ளி தமிழகத்திலும் அதிக வசூலை ஈட்டி இந்த படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும்.. நல்ல வசுலை ஈட்டி தமிழகத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து நான்காவது இடத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் பிடித்துள்ளது.  ஐந்தாவது இடத்தில் சிபி சக்கரவர்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதல் முறையாக வெளிவந்த டான் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை அள்ளிய நிலையில் இந்த படம் தமிழக வசூலில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது.

இதைப்போல் 2022 ஆம் ஆண்டு அரையாண்டில் சென்னையில் அதிக வசூலை அள்ளிய திரைப்பட பட்டியலும் வெளிவந்துள்ளது அதிலும் முதலிடத்தில் விக்ரம், இரண்டாவது இடத்தில் கே ஜி எஃப் 2, மூன்றாவது இடத்தில் பீஸ்ட், நான்காவது இடத்தில் வலிமை, ஐந்தாவது இடம் மற்றும் சற்று மாறுதலாக RRR படம் இடம் பிடித்துள்ளது.

Leave a Comment