2022 – மலேசியாவில் அதிக வசூலை அள்ளிய டாப் 10 தென்னிந்திய திரைப்படங்கள்.! முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா.?

ஒரு வருடம் முடியும் பொழுது அந்த வருடத்தில் வெளிவந்த படங்கள் அதிக வசூல் செய்த திரைப்படம் எது.. அந்த வருடத்தில் யார் நம்பர் ஒன்.. அதிக முன் பதிவு செய்யப்பட்ட படங்கள் எது என்பது குறித்து பல தகவல்கள் வெளியாகுவது வழக்கம்.. அதுபோல ஒரு விஷயத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம்

தென்னிந்திய சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளி வருகின்றன அதில் ஒரு சில திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடிப்பது மட்டுமல்லாமல் பிரம்மாண்டமான வசூலை அள்ளும் அந்த வகையில்  இந்த வருடத்தில் மலேசியாவில் வெளியான தென்னிந்திய சினிமா படங்களில் அதிக வசூல் செய்த 10 திரைப்படங்கள் குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம்..

மலேசியாவில் அதிக வசூலை அள்ளி நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் திரைப்படம் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம். இந்த படம் மலேசியாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே மிகப்பெரிய வசூலை அள்ளி அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது இடத்தை பிடித்து வலம் வருவது யாஷ் நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படம் தான் மலேசியாவில் அதிக வசூல் செய்து இந்த இடத்தை பிடித்துள்ளது. நான்காவது இடத்தை தனக்கு சொந்தமாக்கி உள்ளார் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் அதிக வசூலை மலேசியாவில் பதிவு செய்து இந்த இடத்தை பிடித்திருக்கிறது.

ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பது அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம். அடுத்தடுத்த இடங்களை பிடித்திருப்பது திருச்சிற்றம்பலம், சர்தார், டான், RRR மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. மலேசியாவில் அதிக வசூலை அள்ளி முதல் 10 இடத்தைப் பிடித்த தென்னிந்திய சினிமா படங்கள்..

Leave a Comment