ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சினிமா பிரபலங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆஸ்கார் விருதுகள் உறுதுணையாக இருந்து வருகிறது இந்த நிலையில் டூன் என்ற திரைப்படம் இந்த வருடத்தில் 6 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
மேலும் இந்த வருடத்தில் விருது வாங்கும் விழாவில் எந்தெந்த விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே காணலாம். டூன் திரைப்படம் இந்த திரைப்படம் இதுவரை ஆறு விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த எடிட்டிங் சிறந்த இசை, சவுண்ட் எஃபெக்ட், ப்ரடக்ஷன் டிசைன், சிறந்த எடிட்டர், சிறந்த விஷுவல் எஃபக்ட் என 6 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.
அதுமட்டுமில்லாமல் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆஸ்கர் விருதை டூன் திரைப்படத்திற்காக கிரேக் பிரேசர் வென்றுள்ளார். அதேபோல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை டூன் திரைப்படத்திற்காக ஐந்து நபர்கள் பெற்றுக் கொண்டுள்ளார்கள். மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ க்ரீன் டக் ஹம்பில் மற்றும் ரான் பார்ட்டிலேட் அவர்கள் அனைவரும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சிறந்த விஷுவல் எஃபெக்ட் கான விருதை நான்கு பேர் பெற்றுள்ளார்கள். மேலும் சிறந்த துணை நடிகர் விருதை கோடா படத்தில் நடித்த ட்ராய் கோச்சர் பெற்றுள்ளார்கள். மேலும் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை என் காண்டோ என்ற திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த ஆவணம் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை குயின் ஆஃப் ஃபேஸ்கட்பல் பெற்றுள்ளது. சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை ஜப்பான் நாட்டு திரைப்படமான ட்ரைவ் மை கார் என்ற திரைப்படம் வென்றுள்ளது.
மேலும் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான சிறந்த ஆஸ்கர் விருதை குருயல்லா திரைப்படம் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்திற்காக ஆடை வடிவமைப்பாளர் ஜென்னி பீவர் விருதை தட்டிச் சென்றுள்ளார்..
இவர் இதற்கு முன்பு மேட் மேக்ஸ் ஃப்யூரி படத்திற்காக 6 வருடத்துக்கு முன்பே ஆஸ்கர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
