2021 box office
2021 box office

Box office : ஒரு படம் வெற்றி பெற்றுள்ளதா இல்லையா என்பதை அதன் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை வைத்து தான் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் லிஸ்ட் இங்கே காணலாம்

மாஸ்டர் : உலகம் முழுவதும் 300 கோடி வரை வசூல் செய்த தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய், மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி ஆகியவர்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 25 கோடி வரை வசூல் செய்தது அதேபோல் மூன்றே நாட்களில் இந்த திரைப்படம் 100 கோடியை தாண்டியது அதேபோல் இந்த திரைப்படம் லாக்டவுனுக்கு பிறகு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்தே : சிறுத்தை சிவா இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாக்கிய திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது 180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது இந்த திரைப்படம் வெளியாகி 240 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

டாக்டர்: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் டாக்டர் இந்த திரைப்படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது ஆனால் முதல் 25 நாட்களிலேயே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது 2021 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களில் மூன்றாவது இடத்தை பிடித்தது.

மாநாடு : வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மாநாடு இந்த திரைப்படம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியானது அதேபோல் மாநாடு திரைப்படமும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

கர்ணன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கர்ணன் இந்த திரைப்படத்தில் ராஜீஷா விஜயன், நடராஜன், சுப்பிரமணியம், யோகி பாபு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் அதேபோல் இந்த திரைப்படம் வசூலில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது ஏப்ரல் 9ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது கர்ணன் திரைப்படம் கிட்டத்தட்ட 63 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.