2020ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தால் பல பிரச்சனைகளை சந்தித்தோம். கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்ததால் அடுத்த நாள் இருப்போமா இருக்க மாட்டான் என்ற சிந்தனையுடன் ஒவ்வொரு நாளும் கடந்து வந்தோம்.
அந்த வகையில் 2021ஆம் ஆண்டு இந்த பிரச்சனை அனைத்தும் சரியாகி விட வேண்டும் என்று மிகவும் மகிழ்ச்சியாக 2021 அழைத்தோம். அந்த வகையில் 2021 அறிமுகமானதும் ஓரளவிற்கு கொரானா தாக்கம் குறைந்தது. அனைத்து துறைகளும் மூடிக் கிடந்த நிலையில் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறியது.
அந்த வகையில் தியட்டர்களும் 50 சதவீத பார்வையாளர்களுடன் துவங்கப்பட்டு பிறகு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அந்த வகையில் வரிசையாக பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. முதலில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து உலகம் முழுவதும் 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து கார்த்தி தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்தது. தற்போது தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக எந்தெந்த திரைப்படங்கள் சாதனை படைத்துள்ளது என்ற லிஸ்டை தற்போது பார்ப்போம்.
1.மாஸ்டர்
2.கர்ணன்
3.சுல்தான்
4. காட்ஷில்லா vs காங்
5.ஈவரன்