2020-ல் நம்ம நயன்தாரா, காஜல் அகர்வால், கீர்த்திசுரேஷ், ரகுல் பிரீத் சிங் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இதோ ஷாக்கிங் ரிப்போர்ட்.

தமிழ்சினிமாவில் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் இவர் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார் அது மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ் ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால் என பல நடிகைகள் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்.

அதைப்போல் நடிகைகள் அனைவரும் தங்களுடைய மார்க்கெட்டுக்கு ஏற்றவாறு சம்பளம் வாங்குகிறார்கள், மார்க்கெட் உயரும் பொழுது தங்களின் சம்பளத்தையும் உயர்த்தி கொண்டே செல்கிறார்கள்.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிக்க வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனாலும் இன்னும் மவுசு குறையாமல் ஒரு படத்திற்கு மூன்று கோடி முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என தகவல் கசிந்துள்ளது.

அதேபோல் நடிகை சுருதிஹாசன் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார் ஆனால் தெலுங்கு சினிமாவில் நல்ல மார்க்கெட் இருக்கிறது அதனால் தற்போது இவருக்கு ஒரு கோடி வரை சம்பளமாக வழங்கப்படுகிறது எனக் கூறுகிறார்கள்.

குறுகிய காலத்தில் முன்னணி நடிகையின் இடத்தை பிடித்த கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் சூர்யா விஷால் தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டார், இன்னும் இவர் அஜித், கமலுடன் மட்டும் தான் நடிக்கவில்லை, ரஜினியுடன் கூட அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடித்த மகாநதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடைந்தது அடுத்து  தொடர்ந்து தற்போது இவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது என தகவல் கிடைத்துள்ளது.

அதேபோல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் தமிழிலும் இவருக்கு நல்ல மார்க்கெட் கிடைத்து வருகிறது அதனால் இவர் இதுவரை ஒரு படத்திற்கு ஒரு கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

நடிகை காஜல் அகர்வால் தமிழில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார், பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.

பல நடிகைகளுக்கு திருமணம் ஆனால் பட வாய்ப்பு கிடைப்பது ரொம்ப கஷ்டம் ஆனால் திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக பிஸியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா, இவர் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இரண்டு கோடி என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment