வருகின்ற 2020 ஆம் ஆண்டு பார்ட் 2 படங்கள் ஹிட் அடிக்குமா.! இதோ லிஸ்ட்

தமிழில் ஒரு படம் நல்ல கதைக்களம் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கருதுகின்றனர். இந்த மாதிரி படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் நோக்கில் டைரக்டர்கள் மற்றும் நடிகர்கள் களமிறங்குகின்றனர். இதேபோல தமிழ் சினிமா பல படங்கள் இரண்டாம் பாகங்களாக எடுக்கப்படுகின்றன இதில் சில படங்கள் வெற்றி / தோல்வி அடைகின்றன. இதைப்போல முதல் திரைப்படம் வெற்றி அடைந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் 2020 ஆம் ஆண்டு வெளியாக உள்ள நிலையில் அவற்றின் பட்டியல் கீழ்வருமாறு:

1.கமல் நடித்த இந்தியன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது இப்படத்தை இயக்கிய ஷங்கர் ஒரு வித்தியாசமான கதையை எடுத்து இருந்தார் இப்படம் கமலுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது இந்த படம் 1996 வெளிவந்தது.இந்த படத்தில் கமல் வயதான கெட்டப்பில் கெட்டப்பில் நடித்திருந்தார் இதில் அவர் பேசும் வசனங்களும் மற்றும் டயலாக்குகளும் ஒவ்வொன்றும் மக்கள் மனதில் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இதில் அவர் தனது நடிப்பு திறமையை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். முதல் படத்தை இயக்கிய ஷங்கர் அவர்கள் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கிறார்.தமிழ் ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

2. கன்னட படமான கேஜிஎப் படத்தை யாஷ் அவர்கள் ஏற்று நடித்திருந்தார் இப்படம் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்களா விடமாட்டார்களா என்று எதிர்பார்த்த நிலையில் படத்தின் வசனங்கள் மற்றும் கதைக்களம் சிறப்பாக இருந்ததால் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக அளவிலும் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. இப்படத்தை தமிழ் ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி வந்தனர்.இரண்டாம் பாகம் வெளியாகுமா ஆகாதா எதிர்பார்த்த நிலையில் கே ஜி எஃப் 2 மோசன் பிச்சர் யாஷ் பிறந்தநாளன்று வெளியிட்டனர். இதன் மூலம் கேஜிஎப் 2 படம் வெளியாகும் என மக்கள் கருதினர். அறிவிப்பு செய்திகளும் கிடைத்தன இப்படம் செப்டம்பரில் வெளியாகும் என இணையதளங்கள் தெரிவிக்கின்றன. இதை கண்ட ரசிகர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

3. துப்பறிவாளன் படம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியது இப்படத்தில் விஷால் புதியதொரு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய ட்ரெண்ட் ஆனது இப்படம் ஆக்சன் மற்றும் திரில்லர் கொண்ட கதைக்களம் ஆகவே அமைந்தது. நீ இப்படம் கோலிவுட்டில் ஷெர்லாக் ஹோம்ஸ் படத்தை தழுவியதாக இருந்தது எனினும் இதை மக்கள் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4. இன்று நேற்று நாளை திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கின்றதது. இப்படத்தின் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் நிலவோடு வரவேற்பை பெற்றது எனினும் வசூலில் பின்னடைவாகவே அமைந்தது. எனினும் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க அக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இப்படத்தின் இயக்குனர் சற்று வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துள்ளார்.மக்களுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு எடுத்தால் இப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

5. நாடோடிகள் 2 இப்படம் வெளியாகி உள்ளது இப்படம் மக்கள் மத்தியில் நல்லதொரு சமுக வைத்துள்ளது. இப்படம் வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் படத்தில் சசிகுமார் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை சமுத்திரக்கனி அவர்கள் இயக்கியுள்ளார் எனவே இப்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள். மேலும் 6. கும்கி 2, 7.ராஜதந்திரம் 2, 8.சதுரங்க வேட்டை 2

2020இல் இத்தகைய இரண்டாம் பாகங்கள் வெளிவந்து வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment