2020ஆம் ஆண்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சர்ச்சையான 12 தரமான சம்பவங்கள்.!

2020 ஆம் ஆண்டு திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவைகள் என்னென்ன என்பதைக் கீழே காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிக்கையில் 50வது ஆண்டு விழாவில் பேசியுள்ளார், அப்பொழுது அவர் பெரியாரைப் பற்றிய சில கருத்துக்களை முன்வைத்தார் அந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை சந்தித்தது, அதனால் ரஜினி பெரும் சர்ச்சையை சந்தித்தார், இந்த நிலையில் ஒரு சிலர் ரஜினியை மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினி நான் நடந்ததை தானே கூறினேன் என மன்னிப்பு கேட்க மறுத்தார்.

rajinikanth

விஜய்யை படுத்திய வருமான வரித்துறை ரைடு: தளபதி விஜய் மாஸ்டர் படப்பிடிப்புக்காக நெய்வேலி சென்றிருந்தார், அப்பொழுது வருமானவரித் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என விஜய்யை மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள், இந்த விசாரணை நடந்த பின்பு தளபதி விஜய் ரசிகர்களை சந்தித்தார்.

அப்பொழுது நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆசை ஆசையாய் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட் ரீ ட்விட்  செய்யப்பட்ட புகைப்படத்தில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

vijay-most-retweeted-selfie-in-twitter

கமலஹாசன் இந்தியன் 2 : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது,அதற்காக சென்னையில் உள்ள பூந்தமல்லியில் இந்தியன்-2 படப்பிடிப்புக்காக செட் அமைக்கப்பட்டு இருந்தது ஆனால் எதிர்பாராத விதமாக லிஃப்ட் அறுந்து கொண்டு கீழே விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியாக்கியது, மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள், கமலஹாசன் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு படத்தின் தயாரிப்பாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார். அதுமட்டுமில்லாமல் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி பட குழு சார்பாக வழங்கப்பட்டது.

kamal

மோகன்ஜி அவர்களின் திரவுபதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு.

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் அஜித்தின் மைத்துனர் ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் ஷீலா கருணாஸ் ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகி திரைப்படம் திரௌபதி, இந்த திரைப்படம் ஜாதி, கலப்பு திருமணம் நடக்கும் அவலத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கூறுவது தான் இந்த படம், அதனால் எதிர்ப்புகள் அதிகரித்தது.

draupadi

ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கிய இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டையும் வசூலில் கல்லா கட்டியது.

ஜோதிகா தன்னுடைய படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்றார் அப்பொழுது ஒரு விழாவில் கலந்து கொண்டு ஜோதிகா பேசியுள்ளார். அப்பொழுது அவர் பேசுகையில் அரசு  மருத்துவமனையை பார்வையிட்ட தாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது கோவிலுக்கு செலவுசெய்து பராமரிப்பது போல் மருத்துவமனைக்கும் செலவு செய்து பராமரிக்க வேண்டும்.

கோவில் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனைக்கு கொடுக்கலாம் என கருத்துத் தெரிவித்தார் இந்த கருத்திற்கு பல எதிர்ப்புகளும் கிளம்பியது அதன் பிறகு நடிகர் சூர்யா ஜோதிகா சொன்ன அதே கருத்தை தான் விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியவர்களின் கூறியுள்ளார்கள் எனக்கூறி அந்த சர்ச்சைக்கு முடிவு கட்டினார்.

ஜோதிகா : ஜோதிகா நடிப்பில் வெளியாகிய பொன்மகள் வந்தால் என்ற திரைப்படமும் சூர்யா நடிப்பில் வெளியாகிய சூரரைப்போற்று திரைப்படமும் திரையரங்கில் வெளியாகும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்பர்த்தார்கள். ஆனால் இந்த இரண்டு திரைப்படமும் OTT இணையதளத்தில் வெளியானது இதனால் கோபம் அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இனி சூர்யா மற்றும் ஜோதிகா திரைப்படத்தை திரையரங்கில் ஒளிபரப்ப மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறினார்கள்.

Ponmagal-Vanthal-tamil360newz

வனிதாவின் சர்ச்சை : நடிகை வனிதா 3-வது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் இருவரும் தேனிலவுக்காக கோவா சென்றார்கள் அங்கு பீட்டர் பால் அதிகமாக குடித்ததால் பீட்டர் பால் அவர்களை விவாகரத்து செய்யப் போகிறேன் என வனிதா கூறினார்.

vanitha

விஜய் சேதுபதியின் 800: நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருந்தார்,ஆனால் இலங்கை தமிழர்களின் படுகொலைக்கு முத்தையா முரளிதரன் குடும்பம் ஆதரவாக குரல் கொடுத்ததால் இந்த திரைப்படத்தில் விஜய்சதுபதி நடிக்க கூடாது என பல சர்ச்சைகள் எழுந்தது.

அதன்பிறகு அரசியல் தலைவர் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் படத்தில் நடிக்கக் கூடாது என விஜய் சேதுபதியிடம் கூறியிருந்தார்கள், அதனால் என்ன  செய்வது என தெரியாமல் ஒத்துழைத்து இந்த திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

சிம்புவின் ஈஸ்வரன் : நடிகர் சிம்பு நடித்துள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு பிடித்தவாறு போஸ் கொடுத்து இருப்பார். அதைப் பார்த்த வனத் துறையினர் வன உயிரியல் சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டினார்கள்.அதன் பிறகு சிம்பு கையில் வைத்திருக்கும் பாம்பு பிளாஸ்டிக் பாம்பு எனவும் கிராபிக்ஸில் நிஜ பாம்பு போல் உருவாக்கியதாகவும் தெரிவித்தார்கள்.

eswaran

சித்ராவின் தற்கொலை : சின்னத்திரை நடிகை சித்ரா பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டார் இவரது தற்கொலைக்கு அவரது கணவர் ஹேமந்த் காரணம் என பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்,மேலும் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சித்ரா உடன் பணியாற்றும் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இசைஞானி இளையராஜாவும் பிரசாந்த் ஸ்டுடியோவும் :  இசைஞானி இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவின் அரங்கில் உள்ள ஐந்து அறைகளை இசைக்காக இளையராஜா பயன்படுத்தி வந்தார்.இந்த நிலையில் பிரசாந்த் ஸ்டுடியோ நிர்வாகிகளுடன் சில கருத்து வேறுபாடு காரணமாக தனது ஸ்டுடியோ அறையை பூட்டிவிட்டு 2018 ஆம் ஆண்டு வெளியேறினார்.

அதன் பிறகு பிரசாந்த் ஸ்டுடியோ நிர்வாகிகள் உடன் கருத்து வேறுபாடு காரணமாக தனது மியூசிக் அறையை பூட்டிவிட்டு நீண்டகலமாக வரவில்லை,அதன்பிறகு நீதிமன்றத்திற்கு சென்று பல சர்ச்சைகள் எழுந்தது அதன்பிறகு இசைஞானி நீண்டகாலமாக வராததால் அவரின் இசைக்கருவிகள் மற்றும் விருதுகள் அனைத்தும் பத்திரமாக வேறொரு அறைக்கு மாற்றப்பட்டது.

ரஜினியின் அரசியல் – ரஜினி நீண்ட காலமாக கட்சி தொடங்குவதாகவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக முதலில் தெரிவித்திருந்தார் அதனால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இருந்தார்கள் ஆனால் ரஜினியின் உடல்நிலை சமீபத்தில் சரியில்லாத காரணத்தால் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார் இதனால் பல ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள் இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

Leave a Comment

Exit mobile version