2020-ல் இதுவரை வெளிவந்த திரைப்படத்தில் முதல் இடத்தைப் பிடித்த திரைப்படம் எந்த திரைப்படம் தெரியுமா இதோ லிஸ்ட்.

தமிழ் படம் மட்டுமல்லாமல் இந்தியாவில் எந்த மொழி திரைப்படம் வெளியானாலும் முதலில் ரசிகர்கள் பார்ப்பது பாக்ஸ் ஆபிஸ்ல எந்த அளவு ஹிட் அடித்துள்ளது என்று தான் பார்க்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக தமிழ் மொழியில் திரைப்படம் வெளியான முதல் நாள் முதல் வசூல் நிலவரத்தைத் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள், அந்த வகையில் ரஜினி,அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை எதிர்பார்ப்பது ரசிகர்களின் வழக்கம் தான்.

ஏனென்றால் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் திரைப்படம் ரசிகர்களிடம் அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த முன்னணி நடிகர்களின் படம் மட்டுமல்லாமல் தற்பொழுது மற்ற நடிகர்களின் படங்களையும் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

கடந்த வருடம் வெளியாகிய விஸ்வாசம், பேட்ட, பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது, தனுஷின் அசுரன் திரைப்படமும், கார்த்தியின் கைதி திரைப்படமும் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனையை உருவாக்கியது, இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியாகிய திரைப்படங்களில் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபீஸில் வசூலில் இடம் பிடித்த திரைப் படங்களை இங்கே காணலாம்.

1. தர்பார் – 15.01 கோடி, 2. பட்டாஸ் – 2.83 கோடி, 3. ஓ மை கடவுளே – 2.43 கோடி, 4. சைக்கோ – 2.41 கோடி, 5. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – 1.13 கோடி, 6. AlaVaikunthapurramuloo – 1.1 கோடி, 7. SarileruNeekevvaru – 1.05 கோடி, 8. டகால்டி – 65 லட்சம், 9. டாணா – 18 லட்சம்

Leave a Comment