உலக கோப்பை யை இந்த நாடு தான் வெல்லும் என ஆறு மாதத்திற்கு முன்பே கூறிய பிரபல ஜோதிடர்.! வைரலாகும் வீடியோ

0
world cup
world cup

உலகக் கோப்பைப் போட்டியில் இந்த நாடுதான் வெல்லும் என, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பாலாஜி ஆறு மாதத்திற்கு முன்பே பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புட்டு புட்டு வைத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இந்திய மோதியது இதில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது, இந்த நிலையில் பிரபல ஜோதிடர் பாலாஜி 6 மாதத்திற்கு முன்பு ஜனவரி மாதம் 2019ஆம் ஆண்டு ராசிபலன் குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரபல ஜோதிடர் பாலாஜி, இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது பதிலளித்தார் பாலாஜி.

அதே போல் அவரிடம் இந்த வருடம் உலக கோப்பை போட்டியில் என்ன நடக்கும் யார் வெல்வார் என கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த ஜோதிடர் பாலாஜி என்னுடைய கணிப்பை கூறுகிறேன் பின்பு கிரகத்தின் படிதான் நடக்கும் எனக் கூறிவிட்டு இந்த வருடம் உலக கோப்பை போட்டி  இங்கிலாந்தில் நடைபெறவிருக்கிறது, எனக் கூறிவிட்டு இந்த வருடம் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் தேர்வாகும்.

அதேபோல் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் அல்லது இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதும், அதில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது எனக் கூறினார், மேலும் இந்த வருடம் உலக கோப்பையை நியூஸிலாந்து அணி தான் வெல்லும் என கூறினார், மேலும் கே வில்லியம்ஸ் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கணித்துள்ளார், இதுவரை அவர் கூறியது போலவே நடந்துள்ளதால் இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.