கடந்த வருடம் சமூகவளைதலத்தில் மிகவும் பிரபலமடைந்த டாப் 10 சீரியல் நடிகை.!

தமிழ்சினிமாவில் இருக்கும் வெள்ளி திரை நட்சத்திரங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதுபோல் சின்னத்திரை நட்சத்திரங்களும் ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் இழுத்து வருகிறார்கள், அதற்கு இவர்கள் சமூக வலைதளத்தை கடைபிடிக்கிறார்கள்.

அதேபோல் தமிழ் ரசிகர்களால் தற்பொழுது வெள்ளித்திரை நடிகைகளுக்கு அங்கீகாரம் கொடுப்பதுபோல் சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கும் அங்கீகாரம் கொடுத்து வருகிறார்கள், அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சின்னத்திரை நடிகைகளின் பட்டியலை இங்கே காணலாம்.

1. அதில் முதலிடத்தில் ஷபானா ஷாஜஹான் இருக்கிறார், இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி நாடகத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் ஆதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர்களுக்கிடையே காதல் உணர்வு ஏற்படுகிறது இதனால் ரசிகர்கள் முன்பு நல்ல வரவேற்பைப் பெற்ற நாடகமாக அமைந்தது. இந்த கதைக்காக இவர் தமிழில் பல விருதுகளை பெற்றுள்ளார்.

2. இரண்டாம் இடத்தில நித்யா ராம் அவர்கள் இருக்கிறார், இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் உருவான நந்தினி  சன் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களை இத்தொடரில் இழுத்துள்ளார். எனவே நந்தினி தொடரில் முன்னணி நடிகையாக நடித்து திரை உலகத்திற்கு புகழ் பெற்றவராக உருவாகியுள்ளார்.

3. வித்யா பிரதீப் – இவர் சன் சீரியலில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யா பிரதீப். அதுமட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

4. ரஷா ஹோலா- கர்நாடக மாநிலத்தில் மாடலிங் ஆக பிரபலமான இவர் கர்நாடக சீரியல் தொடரில் பிரபலமாகியுள்ளார் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் விஜய் தொடரில் தமிழ் கடவுள் முருகன் என்ற தொடரில் நடித்த அறிமுகமான இவர் இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

5. பிரியங்கா நல்கரி -ரோஜா சீரியல் முன்னணி நடிகையாக நடித்து புகழ் பெற்ற இவர் ஏற்று நடித்துள்ள இந்த கதைக்கு பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

6. ஆலயா மனசா – இவர் நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவம் இல்லாமல் தமிழ் சின்னத்திரை உலகில் ராஜா-ராணி-சீரியலில் அறிமுகமாகிய இருவர் திடீரென பிரபலமானவர். அதுமட்டுமல்லாமல் இவர் பல விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

7. பப்ரி கோஷ்- சன் சீரியல் நாயகி தொடரில் கதாநாயகிக்கு தோழியாக நடிக்கும் இவர். பாண்டவர் இல்லம் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

8. சைத்ரா ரெட்டி – பல தொடரில் வில்லி கேரக்டரில் நடித்த இவர் அந்தத் தொடரில் நடிப்பை கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

9. சித்ரா வி ஜே – இவர் ஒரு சில நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தலைசிறந்த திரைப்பயணத்தை தொடங்கியுள்ள இவர் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் கதாநாயகியான நடித்துவருகிறார்.

10. ஆயிஷா – சத்யா தொடரில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஏற்று நடித்து தமிழ் சின்னத்திரை உலகில் அறிமுகமாகியுள்ளார்.

Leave a Comment