2019-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நடிகைகள்.! இதோ லிஸ்ட்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு பல நடிகைகள் அறிமுகமாகிறார்கள் ஆனால் இதில் சில நடிகைகள் மட்டுமே பிரபலமடைகிறார்கள், சில நடிகைகள் ஒரு சில படத்திலேயே காணாமல் போகிறார்கள், அந்த வகையில் 2019 ல் தமிழில் அறிமுகமான நடிகைகள் லிஸ்ட் இதோ..

1.ராஷ்மிகா மந்தண்ணா – தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து. அனைவராலும் பிரபலம் அடைந்தார். இதனால் இவருக்கு தமிழ் திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

2.சம்யுக்த ஹெக்டே – 2016-ஆம் ஆண்டு கன்னடம் திரை உலகில் அறிமுகமானார் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த முதல் படம் கிரீக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தமிழ் திரைஉலகில் 2019ஆம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த தமிழில் பிரபலமாகியுள்ளார்.

3.மேகா ஆகாஷ் – 2017 ஆம் ஆண்டு ‘லை’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார், பின்பு தமிழில் வெளிவந்த என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் அறிமுகமானதும் பூமாராங், வந்தா ராஜாவாதான் வருவேன், பேட்ட, போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

4.ஷாலினி பண்டே – 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் இவர் பல ரசிகர்களை கவர்ந்தார். பின்பு தமிழில் வெளியான 100% காதல், கொரிலா, போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

5.ஷ்ரத்தா கபூர் – ஹிந்தியில் பல படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர். தமிழில் வெளியான சாஹோ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

6.க்யாரா அத்வானி – “பியூஜிலி ” என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின்பு ஹிந்தியில் வெளியான இந்திய கிரிக்கெட் வீரர் “எம். எஸ். டோனி “யின் வாழ்க்கை வரலாறு பற்றி எடுத்தது திரைப்படத்தில் சாக்ஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார்.

7.பிரியா பிரகாஷ் வாரியர் – மலையாளத்தில் வெளியான ” ஒரு அடார் லவ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் திரைப்படம் வெளியாகும் முன்பாகவே இணையதளத்தில் அடுத்த காட்சி வெளியாகி வைரலாகி வெளிவந்துள்ளது.

8.மஸீம் ஷங்கர் – 90ml என்ற தமிழ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகி பிரபலம் பிரபலமானவர்.

9.அபிராமி வெங்கடாசலம் – 2017 ஆம் ஆண்டு வெளியான களவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்பு நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பிரபலமானவர்.

1௦.மிருணாளினி ரவி – டிக் டாக் போன்ற இணையதளத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிக்க வாய்ப்பினை பெற்றவர். சூப்பர் டீலக்ஸ் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர்

Leave a Comment