2019 சிறந்த கேட்ச் இதுதான். வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.

0
147

லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் கடைசி போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 12-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி முதலில் இங்கிலாந்து அணி தான் பேட்டிங் செய்தது முதல் இன்னிங்சில் 294 ரன்கள் அடித்து இருந்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் லபுஷேனை 48 ரன்கள் அடித்திருந்தார் ஸ்மித் 80 ரன்களை குவித்தார் மற்ற யாரும் சரியாக விளையாடவில்லை முதல் இன்னிங்சில் 225 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

69 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது மூன்றாவது நாள் ஆட்டம் முழுவதும் பேட்டிங் செய்தது இந்த மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 382 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை விட முன்னிலையில் இருக்கிறது.

இரண்டாவது இன்னிங்சில் கிரிஸ் வோக்ஸின் விக்கெட்டை மிட்செல் மார்ஷ் வீழ்த்தினர். வோக்ஸ் வெறும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் அடித்த பந்தை தாவி பிடித்தார் ஸ்மித், வோக்ஸ் அடித்த பந்து கார்னரில் அடித்து செல்ல அதை இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற ஸ்மித் அபாரமாக கேட்ச் செய்தார் இந்த ஆஷஸ் தொடரின் சிறந்த கேட்ச் இதுதான் இதோ அந்த வீடியோ.