ஒரே ஒரு திரைப்படத்திற்கு 200 தயாரிப்பாளர்கள்.! கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிரட்டப் போகும் தமிழ் படம்.!

நாடு முழுவதும் கொரோனா தாக்கத்தால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது, அந்தவகையில் சினிமாவிலும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் முடங்கிப்போன தமிழ் சினிமாவை மீட்டெடுக்க பலரும் களத்தில் குதித்துள்ளார், அதன் ஒருபகுதியாக பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

அந்தவகையில் வெறும் இரண்டு கோடி பட்ஜெட்டில் புதிய திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார், இந்த ரெண்டு கோடி பட்ஜெட்டிற்கு 200 தயாரிப்பாளர்கள், ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒரு முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் இந்த படத்திற்கு முதலீடு செய்பவர்கள் திரைத்துறையை சார்ந்தவர்களாக மட்டும் தான் இருக்க முடியும்.

மேலும் இந்த திரைப்படத்தின் வியாபாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தயாரிப்பாளர்களுக்கும் அவர்களின் பங்கை பிரித்து தரப்படும். 200 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருக்கிறார்.

மேலும் கெஸ்ட் ரோலில் விஜய் சேதுபதியும் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் இணைந்து நடிக்க இருக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடிக்கும் அனைவருக்கும் வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் எனவும் இவை அனைத்தும் முறையான வங்கிப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதில் ஒரு முக்கியமான கண்டிஷன் என்னவென்றால் படத்தை திரையரங்கில் மட்டுமே திரையிடப்படும், 10 வாரங்கள் அல்லது 100 நாட்களுக்கு பிறகு தான் படத்தை OTT இணையதளத்தில் வெளியிடப்படும். எனக் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் திரையரங்கில் எத்தனை டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளது என்பதை கணினி மூலம் அறிந்து கொள்ள பல  ஏற்பாடுகள் செய்யப்படும்.

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நேரடியாக OTT யில் வெளியிட்டதால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து இப்படி ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்கள், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது வியாபாரத்தின் அடிப்படையில் சம்பளம் என்பதை எத்தனை பெரிய நடிகர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

Exit mobile version